Tuesday, September 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அமலாக்கத் துறை தாக்கல் செய்த ஆவணங்களை வழங்கக் கோரி செந்தில் பாலாஜி மனு -தள்ளுபடியா?.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 14, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அமலாக்கத் துறை தாக்கல் செய்த ஆவணங்களை வழங்கக் கோரி செந்தில் பாலாஜி மனு
28
SHARES
45
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், தனக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகை உள்ளிட்ட ஆவணங்களை வழங்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதனையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, செந்தில் பாலாஜியை ஆக.7-ம் தேதி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வைத்து ஆக.12-ம் தேதி வரையிலான 5 நாட்கள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

கடந்த, ஆக.12-ம் தேதியுடன் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் ஆக.25-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி தரப்பில் திங்கள்கிழமை முறையீடு செய்யப்பட்டது. “அமலாக்கத் துறை தன்னிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் 120 பக்கங்களைக் கொண்ட குற்றப் பத்திரிகை மற்றும் அதுதொடர்பான 2,700 பக்கங்களுக்கும் மேற்பட்ட ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த அனைத்து ஆவணங்களையும் தனக்கு வழங்கிட அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், இந்த வழக்கு தொடங்கியதில் இருந்து தன்னிடம் விசாரணை நடத்தியது, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது உட்பட அனைத்து ஆவணங்களையும் தனக்கு வழங்க உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக மனு தாக்கல் செய்துள்ளதால், ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் முறையீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, மனுதாரரின் கோரிக்கைப்படி, ஆவணங்களின் நகல்களை மனுதாரருக்கு வழங்க அமலாக்கத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு வரும் புதன்கிழமை விசாரணைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

.

Tags: அமலககதஆவணஙகளகரசநதலசயததககலதறபலஜமனவழஙகக
Previous Post

அடிப்படை வசதிகளே இல்லாத ஒரு கிராமம்…! வருடக்கணக்கில் கோரிக்கை வைக்கும் மக்கள்..! – கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்.

Next Post

மது குடித்துவிட்டு ஓட்டியதால் பறிமுதல்: காவல் நிலையம் புகுந்து பைக் திருடியவர் கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை | மது குடித்துவிட்டு ஓட்டியதால் பறிமுதல்: காவல் நிலையம் புகுந்து பைக் திருடியவர் கைது

மது குடித்துவிட்டு ஓட்டியதால் பறிமுதல்: காவல் நிலையம் புகுந்து பைக் திருடியவர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In