மங்கையராய் பிறப்பதற்கு
“மா” தவம் செய்திடல் வேண்டும்!
மதுரை மாநகர்- வார்டு- 70 மகளிர் தின விழாவையும் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் 71 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு துரைச்சாமி நகர் பை -பாஸ் சாலை, முகப்பில் குறைந்தது 100 பேருக்கு மேல் இலவச சேலை கோ.தளபதி MLA , மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் அறிவுறுத்தலின் படிவழங்கப்பட்டது.
இந்த நல்லதொரு நிகழ்ச்சியில், அவைத்தலைவர் உயர்திரு.ராமசாமி அவர்களின் தலைமையிலும், துரைச்சாமி நகர்..நல சங்க செயலாளர், உயர்திரு. புஷ்பராஜ், அவர்கள் முன்னிலையிலும், மற்றும் அனைத்து வட்ட கழக நிர்வாகிகள் ஒத்துழைப்போடு வழங்கப்பட்டது.
ஆக்கமும் ஊக்கமும் ஆலோசனையும், வழங்கிய. சகோதரர் ஜெ. மூவேந்திரன் MC, ,அவர்களுக்கும், சகோதரர் மதி. வெங்கடேஷ், அவர்களுக்கும் .. மன நிறைவான நன்றிகளை தெரிவித்தனர்.
மற்றும் வட்டக் கழகத்தைச் சார்ந்த ..திருமதி தமிழரசி, திரு. கார்த்திகேயன், ரவிச்சந்திரன் ,ஜெயச்சந்திரன், பால்ராஜ், அன்பு, சரவணன், பாண்டி, மணி, முருகன், சதீஷ் , சம்சுதீன், நாகராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


