
ஒரு செய்தி சேனலில் நேர்காணலுக்குத் தோன்றிய முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மற்றும் அவரை கொலைசெய்த கொலையாளி நாதுராம் கோட்சே ஆகிய இருவரில் ஒருவரை தேர்வு செய்யக் கேட்டபோது சிந்திக்க சிறிது நேரம் தேவை என்றார். கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் சேர்ந்த சில நாட்களுக்குப் பிறகு, கங்கோபாத்யாய் இவ்வாறு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு கூறியுள்ளளார்.
நிகழ்ச்சியின் முடிவில், கங்கோபாத்யாய் சில கேள்விகளுக்கு விரைவு சுற்றில் பதிலளித்தார், இதில் இரண்டு விருப்பங்களைத் தேர்ந்தெடுப்பது அடங்கும். கார்ல் மார்க்சுக்கும் தாமோதர் விநாயக் சாவர்க்கருக்கும் இடையே அவர் சாவர்க்கரைத் தேர்ந்தெடுத்தார். மதச்சார்பற்ற இந்தியாவிற்கும் இந்து ராஷ்டிர இந்தியாவிற்கும் இடையில், அவர் மதச்சார்பற்ற இந்தியாவைத் தேர்ந்தெடுத்தார்.
இருப்பினும், காந்தியையோ அல்லது கோட்சேவையோ தேர்ந்தெடுக்குமாறு தொகுப்பாளர் கேட்டபோது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். “இந்த கேள்விக்கு நான் இப்போது பதிலளிக்க மாட்டேன்,” என்று அவர் கூறினார், “நான் அதைப் பற்றி கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.”
