Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ராஜ்கோட் விபத்து: “குஜராத் அரசின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம்..!" – காட்டமான நீதிமன்றம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 27, 2024
in அரசியல் செய்திகள்
0
ராஜ்கோட் விபத்து: “குஜராத் அரசின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம்..!" – காட்டமான நீதிமன்றம்
7
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் கடந்த சனிக்கிழமை மாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக தீவிபத்து ஏற்பட்ட டி.ஆர்.பி.கேம் சென்டர் பங்குதாரர்கள் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதில் யுவராஜ் சிங் என்பவர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தீ பாதுகாப்பு சான்றிதழ்கள் உட்பட தேவையான அனுமதிகள் இல்லாமல், இரண்டு கேமிங் சென்டர்கள் 2 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்ததாக தகவல் வெளியானது.

டி.ஆர்.பி.கேம் சென்டர்

இந்த நிலையில், குஜராத் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துகொண்டது. இந்த வழக்கை, நீதிபதிகள் பிரேன் வைஷ்ணவ், நீதிபதி தேவன் தேசாய் ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் விசாரித்தது. அப்போது ராஜ்கோட் முனிசிபல் கார்ப்பரேஷன் (ஆர்எம்சி) தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தீ பாதுகாப்பு சான்றிதழ்கள் உட்பட தேவையான அனுமதிகள் இல்லாமல், எங்கள் ஒப்புதல் பெறாமல் இரண்டு கேமிங் சென்டர்களும் 24 மாதங்களுக்கும் மேலாக இயங்கி வந்திருக்கிறது.” எனத் தெரிவித்தது.

இதைக் கேட்ட நீதிபதிகள் கடும் கோபத்துடன்,“ இரண்டரை ஆண்டுகளாக இந்த கேமிங் சென்டர் செயல்பட்டிருக்கிறது என்றால்… நீங்களும், அரசு அதிகாரிகளும் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்… தூங்கிவிட்டீர்களா? நாங்கள் கார்ப்பரேஷன் (ராஜ்கோட் முனிசிபல்) மீதும், மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க அரசின் மீதும் நம்பிக்கை இழந்துவிட்டோம்.” எனக் கடிந்து கொண்டனர்.

குஜராத் உயர் நீதிமன்றம்!

அதைத் தொடர்ந்து மாநில அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனிஷா லவ் குமார் ஷா, “மால்களுக்குள் உள்ள மினி-கேமிங் சென்டர்கள் உள்பட, அகமதாபாத்தில் இன்னும் சில கேமிங் சென்டர்களும் அனுமதி இன்றி செயல்படுவதை அறிந்துகொண்டோம். இதுபோன்ற அனைத்து விவரங்களையும் விசாரித்து, 72 மணி நேரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைந்து நடவடிக்கை எடுப்போம்” எனக் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள், “கடந்த நான்கு ஆண்டுகளில் நாங்கள் பல முடிவுகளையும், அறிவுறுத்தல்களையும் குஜராத் அரசுக்கு வழங்கியுள்ளோம். அதற்குப் பிறகும் மாநிலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. 2023-ம் ஆண்டு முதல் குஜராத்தில் நிகழ்ந்த முக்கிய தீ விபத்துகளில், நவம்பர் மாதம் சூரத்தில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல்

சில நாள்களுக்கு முன்பு, நகரின் மல்டிபிளக்ஸ் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சொத்துக்கள் நாசமானது, இரண்டு ஊழியர்கள் காயமடைந்தனர். ஜூலை மாதம் அகமதாபாத் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதால் 125 நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். மே மாதம் நகரின் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. மார்ச் மாதம் சூரத்தில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குழந்தை உயிரிழந்தது. அரசு இயந்திரங்கள் வேலை செய்யாததன் காரணமாகவே இதுபோன்ற தொடர் உயிரிழப்பு நடைபெறுகின்றன.” எனக் காட்டமாக தெரிவித்திருக்கின்றனர்.
.

Previous Post

ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தீக்குளிக்க முயற்சி..

Next Post

வடமாநிலங்களில் எளிதாக கிடைக்கும் அதிநவீன ஸ்நைப்பர் துப்பாக்கிகள்: மது கொடுக்க மறுத்ததால் பார் ஊழியர் சுட்டுக்கொலை: வீடியோ வைரல்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வடமாநிலங்களில் எளிதாக கிடைக்கும் அதிநவீன ஸ்நைப்பர் துப்பாக்கிகள்: மது கொடுக்க மறுத்ததால் பார் ஊழியர் சுட்டுக்கொலை: வீடியோ வைரல்!

வடமாநிலங்களில் எளிதாக கிடைக்கும் அதிநவீன ஸ்நைப்பர் துப்பாக்கிகள்: மது கொடுக்க மறுத்ததால் பார் ஊழியர் சுட்டுக்கொலை: வீடியோ வைரல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In