Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தீக்குளிக்க முயற்சி..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 27, 2024
in Default
1
ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தீக்குளிக்க முயற்சி..
17
SHARES
28
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

குடியிருந்து வரும் வீட்டை போலி பத்திரம் மூலம் வீட்டை அபகரித்துக் கொண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள செட்டியபட்டி மணிவேல் அவரது மனைவி ஜோதிமணி. இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு இரு குழந்தைகளும் உள்ளன. மணி வேலு கடந்த சில வருடங்களுக்கு முன்பு விபத்தில் காயம் அடைந்துள்ளார். இந்நிலையில், மருத்துவச் செலவுக்காக இதே பகுதியைச் சேர்ந்த கோகுல் குமார் மற்றும் அவரது மனைவி ராமேஸ்வரனிடம் சுமார் 2 லட்ச ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். கடனுக்குரிய வட்டியை தற்போது வரை கட்டி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக திடீரென கோகுல கிருஷ்ணனும், அவரது மனைவி ராமேஸ்வரியும், “நீங்கள் வீட்டை விட்டு வெளியேறுங்கள். வீடு எங்களது பெயரில் உள்ளது,” என்று கூறி மிரட்டி விடுவதாகவும், மேலும் கடனாக வாங்கிய இரண்டு லட்சத்திற்கு தற்போது வரை வட்டி கட்டி வரும் நிலையில், போலி பத்திரம் மூலம் வீட்டை அபகரித்துக் கொண்டதாகவும், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஆனால், புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மணி வேலு, ஜோதிமணி, மணிவேலுவின் தாயார் சின்னம்மாள் மற்றும் குழந்தைகளுடன் தங்களது மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

தீக்குளிக்க முயன்றவர்களை பாதுகாப்புக்கு இருந்த காவல்துறையினர் காப்பாற்றி அதிகாரியிடம் அழைத்துச் சென்றனர். குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது

Previous Post

ஜெயலலிதா ஒரு நல்ல இந்துத்துவா தலைவர், அவர் இருந்திருந்தால் இப்படித்தான் செய்திருப்பார்….தமிழிசை சூசகம்..

Next Post

ராஜ்கோட் விபத்து: “குஜராத் அரசின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம்..!" – காட்டமான நீதிமன்றம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ராஜ்கோட் விபத்து: “குஜராத் அரசின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம்..!" – காட்டமான நீதிமன்றம்

ராஜ்கோட் விபத்து: ``குஜராத் அரசின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம்..!" - காட்டமான நீதிமன்றம்

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    தற்கொலைக்கு முயல்வதும் தற்கொலை செய்வதும் மிகவும் கேவலமானது கோழைத்தனமானது தங்களுக்கு உள்ள குறையை போக்குவதற்கு இலவச சட்ட உதவி ஆணையத்திடம் உள்ள வழக்கறிஞரையோ அல்லது ஒரு நல்ல பத்திரிகையாளர்களையோ தொடர்பு கொள்ளுங்கள் அவர்கள் சொல்வதை கேளுங்கள் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் கலெக்டர் அலுவலகத்தில் நான்கு பேர் அதாவது ஒரு ஆறு மாத கைக்குழந்தை உள்பட நான்கு பேர் கிருஷ்ணாயில் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து இறந்தார்கள் அந்த குடும்பத்திற்கு என்ன நீதியா கிடைத்தது ஒரு கருமாந்திரமும் கிடைக்கவில்லை கடன் தொல்லையால் தற்கொலை என்று வழக்கை முடித்து விட்டார்கள் போராடுங்கள் பத்திரிகையாளர்களோடு சேர்ந்து அவர்களின் துணையோடு போராடுங்கள் வெற்றி நிச்சயம்.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In