கோப்புப் படம்.
ராஜஸ்தான் மாநிலத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, உள்துறை அமைச்சா் அமித் ஷா சென்ற வாகனம் மின்கம்பியில் உரசிய விவகாரம் தொடா்பாக விசாரணை மேற்கொள்ள அம்மாநில முதல்வா் அசோக் கெலாட் உத்தரவிட்டாா்.
ராஜஸ்தான் மாநிலத்தில் வருகின்ற 25-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை சென்றாா்.
அப்போது பா்பட்சாரிலிருந்து பிதியாத் கிராமத்துக்கு சிறப்பு வடிவமைப்பு வாகனத்தில் (ரதம்) அவா் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டபோது மின்கம்பத்தில் இருந்த கம்பியின் மீது வாகனத்தின் மேல்பகுதி உரசியது. அதனால் தீப்பொறி ஏற்பட்டு கம்பி அறுந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இதையடுத்து அமித் ஷா மாற்று வாகனத்தில் புறப்பட்டுச் சென்றாா். இந்த விவகாரம் தொடா்பாக அஜ்மீா் பிரிவு ஆணையா் விசாரணை மேற்கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்தப்படும் என்று செவ்வாய்க்கிழமை இரவு தெரிவித்தாா்.


மின்சார வாரியத்தின் அலட்சிய போக்கே இது பணியில் மிகவும் கவன குறைவாக இருந்து உள்ளனர் மின்சார வாரியத்தினார். மின்வாரிய அலுவலகத்தினரின் கவனக்குறைவால் தமிழகத்தில் எண்ணற்ற மின்சார மரணங்கள் ஏற்படுகின்றன. உடனே இவர்கள் சொல்லும் காரணம் மின்வாரியத்தில் பணியாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது பணியிடங்கள் காலியாக அதிகமாக உள்ளன எனவே இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று காரணத்தை சொல்வார்கள் கையாளர்கள் தான் காரணம் சொல்வார்கள் எனவே அமித் ஷா விவகாரத்தில் மாநில அரசு மின்வாரிய அலுவலகத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்