போபால்: மத்திய பிரதேசத்தில், போலீசார் பறிமுதல் செய்து வைத்திருந்த மது பாட்டில்களை எலிகள் குடித்து காலி செய்ததால், ஒரு எலியை மட்டும் பொறி வைத்து பிடித்து கூண்டில் அடைத்துஉள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற 60 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த மது பாட்டில்களை போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருந்தனர்.
அவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக அறையை திறந்து பார்த்தபோது, மது பாட்டில்கள் காலியாக இருந்தன.
போலீஸ் ஸ்டேஷனில் உள்ள எலிகள், பாட்டிலில் துளையிட்டு மதுவை குடித்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து, பொறி வைத்ததில் ஒரு எலி மட்டும் சிக்கியது. அதை கூண்டில் அடைத்துள்ளனர்.
இது குறித்து, சிந்த்வாரா போலீசார் கூறியதாவது:
மதுபானங்கள் பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்ததால் அவற்றை எலிகள் கடித்து ஓட்டையிட்டு உள்ளே இருந்த மதுவை குடித்துவிட்டன. 60 சிறிய பாட்டில்களில் இப்படி ஓட்டை போட்டுள்ளன.
போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் மிகவும் பழமையானது என்பதால், பறிமுதல் செய்யப்படும் பொருட்களை வைக்கும் அறையில் எலிகள் தொல்லை அளவுக்கு அதிகமாக உள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா சாக்குகளையும் எலிகள் விட்டு வைக்கவில்லை. அதனால் கஞ்சாவை இரும்பு பெட்டியில் வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.


பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகளை எலி முழுவதையும் சாப்பிட்டு விட்டது என்று கதை சொன்ன . தமிழ்நாடு அதாவது சென்னை போலீஸ் இப்பொழுது போபால் போலீஸ் எலி சாராயம் முழுவதும் குடித்து விட்டது என்று கதை சொல்கிறார்கள். இந்நிலை நீடித்தால் சீக்கிரமாகவே பறிமுதல் செய்து வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் களை எலி இழுத்துச் சென்று விட்டது என்றும் பறிமுதல் செய்து வைக்கப்பட்ட கார்களை குரங்கு களவாடி சென்று விட்டது என்றும் விசாரணைக்கு வந்தவர்களை கொசு அடித்துக் கொன்று விட்டது என்றும் சொல்லப் போகிறார்கள் இதையெல்லாம் பொதுமக்கள் நம்பத்தான் வேண்டும்