இது குறித்து ராஜ் பவன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `முதல்வர் பரிந்துரையின்படி, செந்தில் பாலாஜி கவனித்துவந்த மின்சாரத்துறையை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு ஒதுக்கவும், மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறையை, வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு ஒதுக்கவும் ஒப்புதல் வழங்கப்படுகிறது. ஆனால், செந்தில் பாலாஜி மீது குற்றவியல் வழக்கு இருப்பதாலும், நீதிமன்றக் காவலில் அவர் இருப்பதாலும், அமைச்சராகத் தொடர்வது மறுக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டிருக்கிறது.

