கோவை 100 அடி சாலையில் உள்ள பிரபல ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்த மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நள்ளிரவு 12.30-1 மணியளவில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

அந்த மர்ம நபர் உள்ளே நுழைந்து பல்வேறு பிரிவுகளில் இருந்து நகைகளை கொள்ளையடித்துள்ளார். காலை கடையை திறந்தபோதுதான் தகவல் தெரியவந்தது. கடையின் மேல் பகுதியில் 12 ஊழியர்கள் தங்கியுள்ளனர். அவர்கள் யாரும் பார்க்கவில்லை என்கின்றனர்.
சம்பவ இடத்தில் சில தடயங்கள் கிடைத்துள்ளன. தடயவியல், மோப்பநாய் உதவியுடன் அறிவியல்பூர்வமான விசாரணை நடந்து வருகிறது. கூடிய விரைவில் குற்றவாளியை கண்டுபிடித்து விடுவோம். சிசிடிவி கேமராவை பார்த்தபோது ஒருநபர் மட்டுமே தெரிகிறார்.

இதில் மேலும் வேறு யாராவது ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்திலும் விசாரிக்கிறோம். தோராயமாக 150-200 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம். சோதனைக்கு பிறகே எவ்வளவு நகை என்ற தகவல் முழுமையாக தெரியும்.
அந்த நபர் முகமூடி அணியவில்லை. சில இடங்களில் சட்டை மூலம் கேமராவை மறைக்க முயன்றுள்ளார். சமீபத்தில் தான் இந்தக் கடையை புனரமைத்துள்ளனர். ஏசி இணைப்பு வழியாக நுழைந்து, அதே வழியாக சென்றுள்ளார்.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவரின் நடவடிக்கை சற்று வித்தியாசமாக உள்ளது. 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.” என்றார்.


கொள்ளையர்கள் எந்தவிதமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும் அதை கண்டுபிடிக்க அதைவிட திறமையானவர்கள் நம் காவல்துறையினர் இதில் எந்த ஒரு மறுப்பும் இல்லை மேலும் கமிஷனர் பாலகிருஷ்ணன் மயிலாப்பூர் மாவட்டத்தின் டெப்டி கமிஷனர் ஆக பணி செய்தவர் மிகப்பெரிய மெரினா புரட்சியின் போது அருகில் இருந்த குப்பத்தினர் கூட்டத்தில் புகுந்து வன்முறை ஈடுபட்டபோது அந்த குப்பத்திற்கே போலீஸ் படையுடன் சென்று கடுமையான நடவடிக்கை எடுத்தவர். டாக்டர் சுப்பையா கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலை செய்த கூலி படையினரையும் அனுப்பி வைத்த குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்தவர் அது மட்டுமல்லாவது அந்த வழக்கை திறம்பட நடத்தி குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை வாங்கி கொடுத்தவர் அந்த குற்றவாளிகள் அனைவருமே தற்போது சிறையில் உள்ளனர். பாலகிருஷ்ணன் அவர்களின் நடவடிக்கைகள் அனைத்துமே சூப்பர்