Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

உணவு முதல் ஆக்சிஜன் வரை! உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய ஊழியர்களை காத்துக்கொண்டிருக்கும் திருச்செங்கோடு..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 28, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
உணவு முதல் ஆக்சிஜன் வரை! உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய ஊழியர்களை காத்துக்கொண்டிருக்கும் திருச்செங்கோடு..!
92
SHARES
149
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை; உத்தரகாண்டில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் சுரங்க ஊழியர்களுக்கு ஆக்சிஜன் தொடங்கி உணவு வரை எல்லாம் கொடுக்க திருச்செங்கோட்டை சேர்ந்த இரண்டு நிறுவனங்கள்தான் காரணம் ஆகும்.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி சில்க்கியாரா சுரங்கப் பாதை இடிபாடுகளில் சிக்கி 17 நாட்களாக 41 தொழிலாளர்கள் சிக்கி தவிக்கின்றனர். இங்கே சுரங்கம் அமைக்கும் பணியின் போது சுரங்கம் இடிந்து உள்ளே மூடியதால் அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

How two Thiruchengode companies are saving workers in the Uttarakhand tunnel collapse rescue operation

சார் தாம் திட்டத்தின் ஒரு பகுதியான இந்த சுரங்கப்பாதை, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சில்க்யாரா மற்றும் தண்டல்கான் இடையே உத்தர்காசி மற்றும் யமுனோத்ரியை இணைக்க உள்ள சாலையில் அமைந்துள்ளது. 4.5 கிமீ சுரங்கப்பாதை அமைக்கும் பணி பெரும்பாலும் முடிவடைந்துள்ளது. மீதம் உள்ள பணிகளை செய்யும் போதே சுரங்கம் இடிந்துள்ளது.

இவர்களை வெளியேற்றும் பணி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இன்று மாலைக்குள் இவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டு நிறுவனங்கள் : உத்தரகாண்டில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் சுரங்க ஊழியர்களுக்கு ஆக்சிஜன் தொடங்கி உணவு வரை எல்லாம் கொடுக்க திருச்செங்கோட்டை சேர்ந்த இரண்டு நிறுவனங்கள்தான் காரணம் ஆகும். ரிக் தொழில் நுட்பத்துடன் கூடிய கருவிகள் மூலம்தான் இங்கே துளையிடப்பட்டு உள்ளது. மேலே துளையிடப்பட்டு அது வழியாக முதலில் ஆக்சிஜன் அனுப்பப்பட்டது.

அதன்பின் எண்டோஸ்கோபி கேமரா அனுப்பப்பட்டு.. அவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டது. அதன்பின் அதே துளை வழியாக உணவும் அனுப்பப்பட்டது. இங்கே துளை போட காரணமாக இருந்தது ‘தரணி ஜியோ டெக்’ நிறுவனம் ஆகும். இவர் திருச்செங்கோட்டை சேர்ந்தவர்கள். இந்த நிறுவனம்தான் ‘பி.ஆர்.டி. – ஜிடி 5’ என்ற கருவி மூலம் துளை போட்டு உள்ளே பொருட்களை அனுப்பி உள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு படை கேட்டுக்கொண்டதன் பெயரில் இவர்கள் களமிறங்கி இங்கே துளை போட்டுள்ளனர். முதல் இரண்டு இடங்களில் போடப்பட்ட துளைகள் சரியாக பயன் அளிக்கவில்லை. இதனால் மூன்றாவது முறையாக இவர்கள் முயன்று அங்கே துளை போட்டுள்ளார்.

திருச்செங்கோடு நிறுவனங்கள்: இது போக ‘பி.ஆர்.டி. – ஜிடி 5’ கருவியை உருவாக்கியதும் இன்னொரு திருச்செங்கோடு நிறுவனம் ஆகும். பரந்தாமன் ராக் டிரில்லர் என்ற திருச்செங்கோடு நிறுவனம்தான் இந்த கருவியை உருவாக்கி உள்ளது. இதைத்தான் ‘தரணி ஜியோ டெக்’ நிறுவனம் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிறுவன ஊழியர்கள்தான் சுரங்கத்திற்குள் ஆக்சிஜன் தொடங்கி உணவு வரை எல்லாம் செல்ல காரணம் ஆவர்.

மீட்பு பணிகள் தீவிரம்: சார் தாம் திட்டத்தின் ஒரு பகுதியான இந்த சுரங்கப்பாதை, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சில்க்யாரா மற்றும் தண்டல்கான் இடையே உத்தர்காசி மற்றும் யமுனோத்ரியை இணைக்க உள்ள சாலையில் அமைந்துள்ளது. 4.5 கிமீ சுரங்கப்பாதை அமைக்கும் பணி பெரும்பாலும் முடிவடைந்துள்ளது. மீதம் உள்ள பணிகளை செய்யும் போதே சுரங்கம் இடிந்துள்ளது.

எலிவலை: எலி வலை தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இவர்களை மீட்கும் முடிவை கையில் எடுத்தனர். சுரங்கம் தூண்டுவதில் பாதுகாப்பற்றதாக கருதப்பட்டு தடைசெய்யப்பட்ட சுரங்க நடைமுறையான “எலி வலை டெக்னிக்” உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை காக்க களமிறக்கப்பட்டது.

இறக்குமதி செய்யப்பட்ட உயர் தொழில்நுட்ப இயந்திரங்கள் பயன் அளிக்காத நிலையில்.. ஊழியர்கள் கையால் சுரங்கம் தோண்டி.. குழாய் அமைத்து.. குழாய் வழியாக ஊழியர்களை வெளியே கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டது.

Previous Post

150-200 சவரன் நகை; கொள்ளையனின் வித்தியாசமான நடவடிக்கை – காவல் ஆணையர் வெளியிட்ட தகவல்

Next Post

டிசம்பர் 24-ம் தேதி கருணாநிதியின் நினைவாக நடைபெறும் நிகழ்ச்சியை மாற்றி வைக்க OPS கோரிக்கை..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
டிசம்பர் 24-ம் தேதி கருணாநிதியின் நினைவாக நடைபெறும் நிகழ்ச்சியை மாற்றி வைக்க OPS கோரிக்கை..!

டிசம்பர் 24-ம் தேதி கருணாநிதியின் நினைவாக நடைபெறும் நிகழ்ச்சியை மாற்றி வைக்க OPS கோரிக்கை..!

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    சுரங்க தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்ற மிகப்பெரிய உதவி அளித்த திருச்செங்கோடு நிறுவனத்திற்கும் சென்னை தரமணி தனியார் நிறுவனத்திற்கும் பொது மக்களின் சார்பாக வாழ்த்துக்கள் அனைவரின் உயிரையும் காப்பாற்றிய விடுங்கள் நண்பர்களே. உயிருக்கு போராடும் சுரங்கத் தொழிலாளர்கள் அனைவரும் நமது உறவினர்களே. அவர்கள் அனைவரும் நல்லபடியாக வீடு திரும்ப கடவுளை பிரார்த்திக்கிறேன்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In