செந்தில் பாலாஜியின் மூளை பாதிப்பு குறித்து கூகுளில் தேடிப் பார்த்தேன். மருந்து எடுத்துக்கொண்டால் சரி செய்யக்கூடிய பிரச்னையே. இன்று பைபாஸ் சிகிச்சை எல்லாம் அப்பென்டிக்ஸ் ஆப்ரேஷன் போல சாதாரணமாகிவிட்டது. எனவே மருத்துவ காரணங்களுக்காக செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தர முடியாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி திரிவேதி கூறினார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் மருத்துவர்களின் ஆலோசனையை கேட்காமல் கூகிள் போன்ற சமூக வலைத்தளங்களை பார்த்து தங்களது தீர்ப்பை கொடுப்பது நீதித்துறைக்கே அவலம் என நேட்டீசன்கள் கலாய்ப்பதை காண முடிகிறது.
2002 குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானோ கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 11 குற்றவாளிகளின் தண்டனையை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிப்பதில் இருந்து நீதிபதி பேலா எம் திரிவேதி தன்னை விலக்கிக்கொண்டார். இதுபோன்ற சர்ச்சைகளுக்கு அடிக்கடி ஆளும் நீதிபதியே திரிவேதி ஆவார்.

சிலமாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தால் நடத்தப்பட்ட முதல் சர்வதேச பெண் நீதிபதிகள் தினத்தை நினைவுகூரும் நிகழ்வில் பேசிய நீதிபதி பேலா எம் திரிவேதி, நீதியின் முழுமையும் சிவனுக்கும் சக்திக்கும் சமமான பிரதிநிதித்துவத்தைப் போல ஆண் மற்றும் பெண் நீதிபதிகள் சமமான அளவில் இருக்கவேண்டும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என்னை பொறுத்தவரை மிக சரியானதே. நமது மக்களுக்கு வேறு வேலையே கிடையாது எதையாவது ஒன்று குறை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த பத்து ரூபாய் பாலாஜியின் மருத்துவ அறிக்கையை அதாவது நம் அரசு மருத்துவர்கள் கொடுத்த அறிக்கையை நீதிபதிகள் ஏற்கவில்லை அறிக்கையை சந்தேகப்படுகிறார்கள் இதுவே உண்மை