Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“நாங்கள் நட்ட மரங்களை அதிகாரிகள் சுடும் தார் ஊற்றி அழிக்கப் பார்க்கிறார்கள்!" – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 23, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
``நாங்கள் நட்ட மரங்களை அதிகாரிகள் சுடும் தார் ஊற்றி அழிக்கப் பார்க்கிறார்கள்!" - எம்.ஆர்.விஜயபாஸ்கர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரை சந்தித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். கரூர் மாவட்ட ஆட்சியரிடம் அவர் வழங்கிய மனுவில், “அமராவதி அணையில் 64 அடி உயரம் தண்ணீர் இருக்கிறது. குடிநீர் தேவைக்காக கடைமடை வரை தண்ணீரை திறக்க வேண்டும். 60 அடி தண்ணீர் இருந்தாலே திறக்கலாம் என விதி இருக்கிறது. அமராவதி ஆற்றின் துணை ஆறான குடகனாற்றில் வரும் கழிவு நீரில் 3500 டி.டி.எஸ் உப்புத் தன்மை கலந்து வருவதால், அவற்றை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கழிவுநீரை ஆற்றில் கலக்கும் நிறுவனத்தை கண்டறிந்து, நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

நாங்கள் நடத்திவரும் டிரஸ்ட் சார்பில் வைக்கப்பட்டுள்ள மரங்களுக்கு தண்ணீர் விட்டு வளர்த்து வருகிறோம். மாநகராட்சி அதிகாரிகள் மூன்று முறை அதில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையை அகற்றினார்கள். வளர்ந்து வரும் மரங்களின் மீது சுடும் தாரை ஊற்றி மரங்களை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவற்றை தடுக்க வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், “கரூர் மாவட்டத்தில் பல்வேறு அடிப்படை பிரச்னைகள் இருக்கிறது. இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். நடவடிக்கை இல்லை என்கின்ற பட்சத்தில், மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும். மேலும், கரூர் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த கேட்ட இடத்தில் காவல்துறை அனுமதி தருவது இல்லை. நாம் கேட்கும் இடத்தை தவிர்த்து, மற்ற இடங்களில் நடத்தச் சொல்லி அலைக்கழிக்கிறார்கள். இதனால், ஒவ்வொரு முறையும் நாங்கள் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றே போராட்டங்கள் நடத்த கூடிய சூழ்நிலை உள்ளது” என்றார்.

.

Tags: அதகரகளஅழககபஊறறஎம.ஆர.வஜயபஸகரசடமதரநஙகளநடடபரககறரகளquotமரஙகள
Previous Post

மோடியை பார்த்ததும் உற்சாகம்.. சூழ்ந்துகொண்ட அமெரிக்க எம்.பிக்கள்.. செல்பி, ஆட்டோகிரப் எடுக்க ஆர்வம்

Next Post

இதுதான் சரித்திரம் திரும்புது என்பதா?அதே பீகார்.. இன்னொரு ஜேபி-யாக நிதிஷ்! ஓரணியில் எதிர்க்கட்சிகள்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இதுதான் சரித்திரம் திரும்புது என்பதா?அதே பீகார்.. இன்னொரு ஜேபி-யாக நிதிஷ்! ஓரணியில் எதிர்க்கட்சிகள்!

இதுதான் சரித்திரம் திரும்புது என்பதா?அதே பீகார்.. இன்னொரு ஜேபி-யாக நிதிஷ்! ஓரணியில் எதிர்க்கட்சிகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In