திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதன் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்த மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு, கொடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வீட்டு காவலில் இருந்து வெளியேறிய அய்யாகண்ணு உள்பட 100 க்கு மேற்பட விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, பிரதமர் திருச்சி வருவதையொட்டி விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்காக அனுமதி கேட்டார்.
ஆனால் போலீசார் அனுமதி மறுத்தனர். இதனை தொடர்ந்து பிரதமருக்கு கருப்பு கோடி காட்டப்படும் என விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
இதனை அடுத்து அய்யாக்கண்ணு வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என போலீசார் வீட்டு காவலில் வைத்து கண்காணித்து வந்தனர். இருப்பினும் பிரதமர் வருகையின் போது விவசாயிகள் சார்பில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
இந்நிலையில் விவசாயிகளில் வருமானத்தை இரண்டு மடங்காக்குவேன் என்ற வாக்குறுதியை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றாதததை கண்டித்து திருச்சியில் சுவாமி தரிசனம் செய்ய வந்த மோடிக்கு எதிராக வீட்டு வேலையில் இருந்த அய்யாக்கண்ணு உள்பட நூறுக்கும் மேற்பட்டவர் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போலீசார் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகளை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பாப்பரப்பை ஏற்படுத்தியது.

