பாரத பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து நேற்று சென்னை வந்த அவர் நேர உள் வெளிநாட்டின் அரங்கில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து இன்று தனி விமான மூலம் திருச்சி சென்ற அவர் ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். திருச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை புரிந்ததால் மாநகர் முழுவதும் மிக தூய்மையாக பேணி காக்கப்பட்டது.
இதற்காக மாநகராட்சி சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் இரவு பகலாக ஸ்ரீரங்கம் நகர் முழுவதையும் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்காக தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு கொண்டு செல்லப்பட்ட அவலம் அரங்கேறியது.
திருச்சி மாநகராட்சி குப்பை அள்ளும் வண்டியில் துப்புரவு பணியாளர்கள் சாப்பிடும் உணவு கொண்டு சென்றதற்கு சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

