Tuesday, September 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தொழிற்சாலைகள் இயங்குகிறதா? – ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 31, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
2
சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தொழிற்சாலைகள் இயங்குகிறதா? - ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
11
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தொழிற்சாலைகள் இயங்குகிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சி.வீ.மெய்யநாதன் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மாவட்ட வாரியாக நிலவும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்பாக மண்டலஇணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர்கள் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,சுற்றுச்சூழல் துறை அமைச்சர்சிவ.வீ. மெய்யநாதன் தலைமையில், சுற்றுச்சூழல் துறை செயலர்சுப்ரியா சாஹூ முன்னிலையில்சென்னை கிண்டியில் உள்ள வாரியஅலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, கேரளாவிலிருந்து சட்ட விரோதமாக திருநெல்வேலி மற்றும் தென்காசி பகுதிகளில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள், அபாயகரக் கழிவுகளை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும். கேரளத்துக்கு செல்லும் வாகனங்களிலும் ஜிபிஎஸ் டிராக்கிங் சிஸ்டம் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்திலுள்ள சிப்காட், சிட்கோ வளாகங்களை தொடர் ஆய்வு செய்து அவ்வளாகத்தினுள் அமைந்திருக்கும் பெரிய வகை (சிவப்பு) தொழிற்சாலைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய மாற்று தொழில் நுட்பங்களுடன் இயங்குகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். தங்கள் மாவட்டங்களில் அமைந்துள்ள கிரானைட் குவாரிகளை தொடர் ஆய்வுசெய்து கண்காணிக்க வேண்டும்.

நகராட்சி பகுதிகளிலிருந்து வெளியேறும் அன்றாட கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் அருகில்உள்ள நீர்நிலைகளை மாசுபடுத்துவதை சுட்டிக்காட்டி அந்நகராட்சிகளில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க அறிவுறுத்த வேண்டும். நகராட்சி திடக்கழிவுகள் குப்பை கிடங்குகளில் எரிக்கப்படுவதை தடுக்க வேண்டும். பயோ மைனிங் மூலம் திடக்கழிவுகளை பிரித்து அறிவியல் முறையில் கையாள தக்க நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள காய்கறி சந்தையிலிருந்து வெளியேறும் திடக்கழிவுகளை அறிவியல்முறையில் கையாண்டு மின்சாரம் தயாரித்தல் மற்றும் கரிம உரமாகமாற்றுதல் போன்ற நடவடிக்கை களை எடுக்க வேண்டும் என்றார்.

.

Tags: அதகரகளககஅமசசரஅறவறததலஆயவஇயஙககறதசயயசறறசசழலதழறசலகளபதககதவகயல
Previous Post

கழிவு நீரிலிருந்து மாசுக்களை அகற்றும் திடப்பொருள்: சென்னை ஐஐடி சாதனை

Next Post

இந்தியாவில் அதிகரிக்கும் ரயில் விபத்துகள் : பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய தலைவர்கள் வலியுறுத்தல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆந்திர மாநில ரயில் விபத்து எதிரொலி: பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய தலைவர்கள் வலியுறுத்தல்

இந்தியாவில் அதிகரிக்கும் ரயில் விபத்துகள் : பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய தலைவர்கள் வலியுறுத்தல்

Comments 2

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    என்னதான் அமைச்சர் சொன்னாலும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எதையும் செய்ய போறது கிடையாது ஏனென்றால் எங்கெங்கே தவறுகள் அதாவது குற்றங்கள் நடக்கின்றன என்பது மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அனைவருக்கும் நன்றாக தெரியும் அவர்கள் லஞ்சத்தை வாங்கிக் கொண்டு அமைதியாக இருக்கப் போகிறார்கள் பொதுமக்கள் எவரேனும் வழக்கு தொடுத்தால் தான் இது போன்ற சுற்றுப்புற சூழல் குறைபாடுகள் முடிவுக்கு வரும்

    Reply
  2. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    என்னதான் அமைச்சர்கள் சொன்னாலும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கேட்கப் போவதே இல்லை அதாவது கண்டுகொள்ளவே மாட்டார்கள் ஏனென்றால் அவர்களுக்கு எங்கெங்கே தவறுகள் அதாவது குற்றங்கள் நடக்கின்றன என்பது நன்றாக தெரியும் அவர்கள் லஞ்சத்தை வாங்கிக் கொண்டு அமைதியாக இருக்கப் போகிறார்கள் பாதிக்கப்பட போவது பொதுமக்கள் தானே எனவே பொதுமக்களில் அந்த மாசு குறைபாடு பற்றி முழுமையாக அறிந்தவர்கள் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு பதிவு செய்யலாம் சுற்றுப்புற சூழல் குறைபாடும் மனித உரிமை மீறலே மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு பதிவு செய்வது பதிவு செய்வதற்கு கட்டணம் எதுவும் கிடையாது வழக்கறிஞர்கள் சேவை இம் வேண்டாம் நீங்களே வழக்காடலாம்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In