மதுரை மாநகராட்சியால் நான்கு மாசி வீதிகளில் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மண்டல மாவட்ட தலைவர்T செல்லமுத்து தலைமையில் மாண்புமிகு அமைச்சர் பி மூர்த்தி அவர்களை சந்தித்து பார்க்கிங் கட்டணம் வசூலித்தால் வணிகர்களும் பொதுமக்களும் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் என்ற விஷயத்தை மாண்புமிகு அமைச்சரிடம் எடுத்துக் கூறினோம் அமைச்சரவர்கள் கனிவோடு ஏற்றுக்கொண்டு பார்க்கிங் கட்டண வசூல் நிறுத்தி வைக்கப்படும் எனஉறுதி அளித்தார்கள் அப்பொழுது மாவட்டச் செயலாளர் கே அழகேசன் மாவட்ட பொருளாளர் கே பி லட்சுமி காந்தன் மாநிலத் துணைத் தலைவர் எஸ் எஸ் பாண்டியன் மாவட்டத் துணைத் தலைவர் எம் வெங்கடேசன் மாவட்ட நிர்வாகிகள் ஜெமினி கே துரைப்பாண்டியன் ஜி கே ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்


பொதுமக்களிடமிருந்து பணம் வசூல் செய்வது குறிக்கோளாக ஒரு அரசாங்கம் வைத்து இருக்கக் கூடாது. அந்த பார்க்கிங் வசதிஅனைத்தையும் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்