மதுரை திருப்பரங்குன்றம் கோவில் சன்னதி தெருவில் உள்ள வி.டி.வி.எஸ். திருமண மண்டபத்தில் மதுரை சத்யாவின் அறமனை காமின் மனவேனிற்காலம் நூல்கள் அறிமுக விழா நடைபெற்றது. அற மனைகாமின் நூலை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றுபவர் முனைவர் இறையன்பு ஆவார். மனவேனிற்காலம் நூலை அறிமுகப்படுத்தி சிறப்புரை அற்றியவர் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன். வரவேற்புரை டி.எல். சஞ்சீவிகுமார் ஆசிரியர் குமுதம் வாழ்த்துரை காவல் கண்காணிப்பாளர் ஆ. மணிவண்ணன், திரைப்பட இயக்குனர் இரா. சரவணன், எழுத்தாளர் ஆத்மார்த்தி, கதிரியக்கத்துறை அரசு ராஜாஜி மருத்துவமனை டாக்டர் சதீஷ் முத்துராம், நன்றியுரையாக மதுரை சத்யா, கவிஞர் கவிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


❤️❤️❤️❤️❤️