அமெரிக்க நிறுவனமான மைக்ரான் டெக்னாலஜி இந்தியாவில் தனது செமிகண்டக்டர் பேக்கேஜிங் ஆலையை அமைக்க 1பில்லியன் டாலர்களை முதலீடு செய்யவுள்ளது. எதிர்காலத்தில் இந்த முதலீடு 2 பில்லியன் டாலர் வரை செல்லலாம் என்று கூறப்படுகிறது.
இந்த மைக்ரான் டெக்னாலஜிஸ் உலகின் முன்னணி செமிகண்டக்டர் தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனம் கணினி, மொபைல்போன் பயன்பாடுகளுக்கான நினைவகம் மற்றும் டைனமிக் ரேண்டம் அணுகல் நினைவகம் சேகரிப்பு பாகங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது.
இப்போது அமெரிக்க பயணம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தின் போது சிப்மேக்கர்களை இந்தியாவிற்கு ஈர்ப்பதற்கான தனது முயற்சிகளை செயல்படுத்துவார். அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

