மன ஆரோக்கியம் ஒரு உலகளாவிய மனித உரிமை என்ற கருப்பொருளை
அடிப்படையாகக் கொண்டு இந்த ஆண்டு மனநல நாள் அக்டோபர் 10 இன்று சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது
சிறைத்துறை டிஜிபி திரு அமரேஷ் பூஜாரி ஐபிஎஸ் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் மதுரை மத்திய சிறையில் இல்ல வாசிகளின் மனநலனை மேம்படுத்தும் வகையில் 10 நாட்கள் தொடர்ந்து ஒவ்வொரு பிரிவிற்கும் மனநலம் சார்ந்த பயிற்சிகள் மற்றும் விளையாட்டுக்கள் மூலம் மனநல மேம்பாட்டிற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது
#தன்னை உணர்ந்து கொள்ளுதல்
#உறவுகளை வளர்த்தல்
#சுய மதிப்பினை உயர்த்துதல்
மன இறுக்கத்தை கையாளுதல்
#சமூகத்துடன் ஒருங்கிணைந்து செல்லுதல்
முதலிய தலைப்புகளின் கீழ் சிறைவாசிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது

திங்கள் அன்று சிஎஸ்ஐ செவிலியர் கல்லூரியில் பணிபுரியும் முனைவர் ஜான்சாம் அருண் பிரபு அவர்கள் சுய மதிப்பினை உயர்த்துவதற்கான வழிமுறைகளை விளக்கி சிறைவாசிகளுக்கு பயிற்சி அளித்தார்
அக்டோபர் 10 இன்று உலக மன நாள் தினத்தன்று மதுரை சரக சிறைத்துறை டிஐஜி திரு பழனி மற்றும் மத்திய சிறை கண்காணிப்பாளர் பொறுப்பு திரு பரசுராமன் இந்திய சிறைப் பணி நிர்வாகிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்
மனப்பிறழ்வு உள்ள சிறைவாசிகள் கலை நிகழ்ச்சிகள் மூலம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டு இருந்தது அவர்கள்
கவிதை போட்டி ,பாட்டுப் போட்டி ,திருக்குறள் ஒப்பு போட்டி, புத்தக மதிப்புரை, மற்றும் கைதட்டல் நடனத்தை அரங்கேற்றம் செய்தனர் இந்திய சிறைப் பணி கழகமூலம் சிறைவாசிகளுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது தொடர்ந்து வரும் வாரம் முழுவதும் மனநலம் என்பது ஒரு நடைமுறை என்ற தலைப்பிலும்
பாரம்பரிய விளையாட்டுகள் எவ்வாறு நேர்மறையான தாக்கத்தை நம் வாழ்வில் ஏற்படுத்துகிறது என்பதை பற்றியும்
மனநலம் அனைவருக்கும் ஆனது என்ற தலைப்பிலும்
சிறை பணியாளர்களுக்கு யோகா மருத்துவர் மூலமாக மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனம் மற்றும் மன அழுத்தத்தை குறைப்பது குறித்தான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது
இறுதி நாளான 17 ஆம் தேதி மத்திய சிறையில் மன இயல் நிபுணர் முனைவர் ஜெயந்தி அவர்கள் இளம் வயது குற்றவாளிகளுக்கு மன்னித்தல் என்னும் மாண்பினை விளக்கி பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார்
இந்நிகழ்ச்சிகள் மூலம் சிறைவாசிகள் மனநல மேம்பாட்டிற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு அதை வாழ்வில் கடைப்பிடித்து நல்ல உடல் நலத்துடன் வாழலாம்

