மதுரையில் அக்டோபர் 14 ம் தேதி செடாய் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் சார்பில் தொழில் முனைவோருக்கான விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது.
இது தொடர்பாக செடாய் அமைப்பின் சேர்மன் ரியாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், தென் தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து மதுரையில் செடாய் அமைப்பின் சார்பில் வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி வேலம்மாள் மருத்துவக் கல்லூரி ஜடா ஸ்கட்டர் அரங்கில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ள தொழில் முனைவோர்களை பாராட்டுகின்ற வகையில் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது
விழாவில் தென் மாவட்டங்களில் உள்ள 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொழிலதிபர்கள் கலந்து கொள்கின்றனர். தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கின்ற வகையில் அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது.
இந்த விழாவில் பல சினிமா பிரபலங்கள், விஜய் டிவி நட்சத்திரங்கள், நட்சத்திர பேச்சாளர்கள், நீயா நானா கோபிநாத் மற்றும் ஈரோடு மகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க உள்ளனர்.
மேலும் இவ்விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர் இவ்வாறு அவர் கூறினார்

