Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

4 வழி மாநில சாலைகளில்.. இனி நோ டோல்கேட்.. தமிழ்நாடு அரசு அதிரடி..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 11, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
4 வழி மாநில சாலைகளில்.. இனி நோ டோல்கேட்.. தமிழ்நாடு அரசு அதிரடி..
13
SHARES
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: மாநில நெடுஞ்சாலைகள் 4 வழிச்சாலைகளாக மாற்றப்பட்டாலும் அதில் டோல்கேட் அமைக்கப்படாது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

7 மீட்டர் கொண்ட மாநில சாலையை, 10 மீட்டராக்கி தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுகின்றனர். மாநிலம் முழுக்க பல இடங்களில் இப்படி சாலைகளை மாற்றுகின்றனர். இப்படி மாற்றப்படும் சாலைகளில் டோல் கேட்டுகள் கூடாது, என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். டோல்கேட்கள் கூடாது என மத்திய அரசுக்கு நாங்கள் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறோம். மீறி வைக்கப்படும் டோல் கேட்டுகளை நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

முக்கியமாக மாநிலம் முழுக்க மாநில நெடுஞ்சாலைகள் 4 வழிச்சாலைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்த சாலைகளில் டோல் கேட்டுகள் அமைக்கப்படவில்லை. இங்கே மீறி அமைக்கப்படும் டோல் கேட்டுகள் கண்டிப்பாக நீக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் பேசுகையில்.. அதிகப்படியான டோல் கேட்டுகள் அமைக்க தமிழ்நாடு அரசு எதிராகவே உள்ளது. இதுவே எங்கள் நிலைப்பாடு. அதிலும் மாநில சாலைகளை தேசிய சாலைகளாக விரிவுபடுத்தி அதில் டோல் அமைப்பதை ஏற்க முடியாது.

அமைச்சர் பேச்சு: மாநில நெடுஞ்சாலைகளை எல்லாம் 4 வழி சாலையாக அமைக்க வேண்டும். விரிவுபடுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அவரின் உத்தரவின் பெயரில் சாலை மேம்பாடு செய்யப்பட்டு வருகிறது. இங்கே பல சாலைகள் இப்படி விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இந்த சாலைகள் எதிலும் டோல்கள் போடப்படவில்லை.

மாநில நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இங்கே விரிவுப்பணிகள் நடந்தாலும் கூட டோல்கள் போடக்கூடாது என்று கூறியுள்ளோம். இங்கே குற்றஞ்சாட்டிய எம்எல்ஏ மாநில சாலையில் டோல் கேட் இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் அது என்ன சாலை.. மாநில சாலை விரிவுபடுத்தப்பட்டு பின் மத்திய அரசு போட்ட டோல் கேட்டா என்று பார்க்க வேண்டும். அதை பார்த்து நாங்கள் சரி செய்வோம். அதேபோல் சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்று இங்கே வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கும் செவி சாய்க்கப்படும் என்று அமைச்சர் எ.வ. வேலு கூறியுள்ளார்.

சென்னை டோல் கேட்: இன்னொரு பக்கம் சென்னையில் பல்வேறு இடங்களில் மெட்ரோ பணிகள் நடக்கும் நிலையில் முக்கியமான டோல்கேட் ஒன்றை மூட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசும் இது தொடர்பான பரிசீலனையில் ஈடுப்பட்டு வருவதாக கூறப்படுகிறது

இதன் காரணமாக மக்கள் சாலைகளில் பயணம் செய்ய முடியவில்லை. இந்த சாலையில் வாகனங்கள் மிக மிக மெதுவாக செல்ல வேண்டிய நிலை உள்ளது. வாகனங்கள் இங்கே ஊர்ந்து செல்லும் போதும் கூட இங்கே டோல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்தான் நாவலூர் டோல் கேட்டை தற்காலிகமாக மூட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசும் இது தொடர்பான பரிசீலனையில் ஈடுப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

முன்னதாக பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை, மேடவாக்கம் சாலைகளில் இனி சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் தொடங்க உள்ளன. இதை முன்னிட்டு இங்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டது. மக்களின் போக்குவரத்தை இது இனி எளிதாக்கும் என்று அமைச்சர் எ.வ. வேலு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Previous Post

மதுரை மத்திய சிறையில் மனநல வாரம் அனுசரிப்பு..

Next Post

இஸ்லாமிய சிறை கைதிகள் விடுதலை | அரசு ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்காதது வருத்தமளிக்கிறது: அன்புமணி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இஸ்லாமிய சிறை கைதிகள் விடுதலை | அரசு ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்காதது வருத்தமளிக்கிறது: அன்புமணி

இஸ்லாமிய சிறை கைதிகள் விடுதலை | அரசு ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்காதது வருத்தமளிக்கிறது: அன்புமணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In