Tuesday, September 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மதுரை-நத்தம் பறக்கும் பாலத்தில் விபத்து: 2 இளைஞர்கள் உயிரிழந்த பரிதாபம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 8, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
1
மதுரை-நத்தம் பறக்கும் பாலத்தில் விபத்து: 2 இளைஞர்கள் உயிரிழந்த பரிதாபம்
74
SHARES
119
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை: மதுரை- நத்தம் மேம்பாலத்தில் விபத்தில் சைக்கிள் டூவீலரில் சென்ற 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மதுரை தல்லாகுளம் மூக்கப்பபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகன் ஸ்ரீனிவாசன் பாபு (22). வடக்குமாசி வீதி இருளப்ப கோனார் சந்து பகுதியைச் சேர்ந்தவர் சந்தான கிருஷ்ணன். இவரது மகன் ஆனந்த கிருஷ்ணன் (22). நண்பர்களான இருவரும் நேற்று (ஜூலை 7ம் தேதி) இருசக்கர வாகனத்தில் அழகர் கோயில் பகுதிக்குச் சென்றுள்ளனர்.

இதன்பின், ஊமச்சிகுளம் பகுதியில் நத்தம் பறக்கும் பாலம் வழியாக வீடு திரும்பினர். ஆனந்த கிருஷ்ணன் டூவீலரை ஓட்டியுள்ளார். மேம்பாலத்தில் வேகமாக வந்த நிலையில், பிடிஆர் சிலை அருகே மேம்பாலத்தின் வளைவில் திரும்பியுள்ளனர். அப்போது, திடீரென ஆனந்த கிருஷ்ணனின் கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் பக்கவாட்டு சுவர் அருகில் இருந்த சிக்னல் கம்பத்தில் மோதியது.

அதேவேகத்தில் ஆனந்த கிருஷ்ணன் பாலத்திற்கு கீழும், ஸ்ரீனிவாசன் பாபு பாலத்திற்கு மேல் பகுதியிலும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் இருவரின் உடல்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், சம்பவ இடத்தை துணை காவல் ஆணையர் அரவிந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேம்பாலம் திறந்து பயன்பாட்டு வந்த நிலையில், இருவர் உயிரிழந்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

.

Tags: இளஞரகளஉயரழநதபரதபமபலததலபறககமமதரநததமவபதத
Previous Post

ஜென்ம நட்சத்திர பலன்கள் – ஜூலை 08, 2023 சனிக்கிழமை

Next Post

ரத்தக் களறியான மேற்கு வங்கம்.. 12க்கும் மேற்பட்டோர் படுகொலை! இன்று நடக்கிறது ஊரக உள்ளாட்சித் தேர்தல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ரத்தக் களறியான மேற்கு வங்கம்.. 12க்கும் மேற்பட்டோர் படுகொலை! இன்று நடக்கிறது ஊரக உள்ளாட்சித் தேர்தல்

ரத்தக் களறியான மேற்கு வங்கம்.. 12க்கும் மேற்பட்டோர் படுகொலை! இன்று நடக்கிறது ஊரக உள்ளாட்சித் தேர்தல்

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    ஆழ்ந்த வருத்தங்கள்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In