Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் 2024 ஜூலைக்குள் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும் – நீதிமன்றத்தில் தென்னக ரயில்வே பதில்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 1, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
கண்காணிப்பு கேமராக்களை அடிக்கடி கண்காணிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
16
SHARES
25
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினால் மட்டும் போதாது, அவை முறையாக செயல்படுகிறதா என அடிக்கடி கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்தது.

கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம், சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற மென்பொறியாளர் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தை அடுத்து, தமிழகம் முழுவதும் பொது இடங்களில் மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், மாவட்டங்களில் உள்ள முக்கிய பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உள்ளதாகவும், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து, தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கெனவே 35 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 407 ரயில் நிலையங்களில் 2024-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என ரயில்வே துறை தரப்பிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கைகளை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, “கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினால் மட்டும் போதாது. அவை முறையாக, திறமையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்” என அறிவுறுத்தி இந்த வழக்கை முடித்து வைத்தது.

.

Tags: அடககடஉததரவஉயரகணகணகககணகணபபகமரககளசனனநதமனறம
Previous Post

22 அடி உயரம்.. எவ்வளவு அழகா இருக்கு அந்த சிலை.. வான்கடேவில் சச்சினுக்கு கிடைத்த ராஜ மரியாதை!

Next Post

போலி ‘தமிழ் வழி கல்வி சான்றிதழ்’ – பல்கலை.களில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுமதி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
போலி 'தமிழ் வழி கல்வி சான்றிதழ்' - பல்கலை.களில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுமதி

போலி 'தமிழ் வழி கல்வி சான்றிதழ்' - பல்கலை.களில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுமதி

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    நீதிமன்றத்தில் எத்தனையோ வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு அதை நிறைவேற்றாத இந்த ரயில்வே இந்த உறுதி மொழியை நிறைவேற்றுகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In