Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

22 அடி உயரம்.. எவ்வளவு அழகா இருக்கு அந்த சிலை.. வான்கடேவில் சச்சினுக்கு கிடைத்த ராஜ மரியாதை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 1, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
22 அடி உயரம்.. எவ்வளவு அழகா இருக்கு அந்த சிலை.. வான்கடேவில் சச்சினுக்கு கிடைத்த ராஜ மரியாதை!
22
SHARES
36
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மும்பை: மும்பை வான்கடே மைதானத்தில் 22 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கரின் முழு வடிவ சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் 24 ஆண்டுகள் உச்சத்தில் இருந்தவர் சச்சின் டெண்டுல்கர். 200 டெஸ்ட் போட்டிகள், 100 சதங்கள், 34 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்கள் என்று யாரும் கற்பனை செய்ய முடியாத சாதனைகளை படைத்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதைவிடவும் பக்தர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு சச்சினை ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரும் கொண்டாடி வருகின்றனர்.

90களில் சச்சின் டெண்டுல்கரை நம்பி மட்டுமே இந்திய கிரிக்கெட் அணி இருந்தது என்று சொல்ல முடியும். வளர்ந்து வந்த இந்தியாவுக்கும், அன்றைய இளைஞர்களுக்கும் சச்சின் டெண்டுல்கர் ஒரு நம்பிக்கையாக இருந்தார். இதன் காரணமாகவே சச்சின் டெண்டுல்கர் உணர்வு ரீதியாக ரசிகர்கள் பார்த்தனர். 10 ஆண்டுகளுக்கு முன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும், இன்றும் சச்சின் மீதான வெளிச்சம் கொஞ்சம் கூட குறையவில்லை.

இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கரின் சொந்த மண்ணில் அமைந்துள்ள வான்கடே மைதானத்தில் அவரது சிலை அமைக்கப்பட்டு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. ஷேன் வார்னே பந்துவீச்சில் சச்சின் டெண்டுல்கர் அடித்த ஷாட்டை நினைவுபடுத்தும் வகையில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கரின் 50வது பிறந்தநாளின் போதே திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சச்சின் டெண்டுல்கரின் சிலை செய்யும் பணிகள் முழுமையாக நிறைவு பெறாததால், தாமதம் ஏற்பட்டது. ஆனால் அந்த தாமதம் கூட சச்சின் டெண்டுல்கருக்கு கூடுதல் பெருமையை ஏற்படுத்தியுள்ளது. உலகக்கோப்பை தொடரில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த நிலையில் சச்சினின் சிலை இன்று திறக்கப்பட்டுள்ளது.

சச்சின் டெண்டுல்கரின் கேலரி அருகே அமைக்கப்பட்டுள்ள இந்த நிலையின் உயரம் 22 அடியாகும். அஹ்மத் நகரைச் சேர்ந்த பிரபல சிலை வடிவமைப்பாளரான பிரமோத் காம்ப்ளே சச்சினின் சிலையை வடிவமைத்துள்ளார். இந்த சிலை திறப்பு விழாவில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதேபோல் சச்சின் டெண்டுல்கர், சச்சின் மனைவி அஞ்சலி, மகள் சாரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாளை போட்டி நடக்கவுள்ள நிலையில் சச்சினின் சிலை திறக்கப்பட்டுள்ளதால், நாளை மைதானம் முழுவதும் “சச்சின்.. சச்சின்..” என்று கரகோஷத்தை கேட்க முடியும்.

Previous Post

அமலாக்கத்துறை அதிரடி.. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ரூ.538 கோடி சொத்துகள் பறிமுதல்..

Next Post

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் 2024 ஜூலைக்குள் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும் – நீதிமன்றத்தில் தென்னக ரயில்வே பதில்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கண்காணிப்பு கேமராக்களை அடிக்கடி கண்காணிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் 2024 ஜூலைக்குள் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும் - நீதிமன்றத்தில் தென்னக ரயில்வே பதில்..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    கிரிக்கெட் விளையாட்டு என்பது ஒரு பொழுதுபோக்கு அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது ஆனால் நம் நாட்டில் முக்கியத்துவம் கொடுத்து லட்சக்கணக்காணேரர் அதில் உட்கார்ந்து பொழுதையும் வீண் அடித்துக் கொண்டிருக்கின்றனர் இது தவறானது இருக்கிற வேலை கொஞ்ச நேரம் பார்க்கலாம் இந்த தொண்டுல்கர் என்கிற நபருக்கு வைக்கும் சிலைக்கு உண்டான நிதியை ஏதேனும் அனாதை இல்லங்களுக்கோ அல்லது பொது நலத்திற்கோ பயன்படுத்தலாம். டெண்டுல்கர் என்கிற விளையாட்டு நபருக்கு சிலை வைத்தது வீண் பண விரயம்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In