Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கே.கே.நகர் அடுக்குமாடி குடியிருப்பில் மண்ணெண்ணெய் குண்டுவீச்சு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 17, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
கே.கே.நகர் அடுக்குமாடி குடியிருப்பில் மண்ணெண்ணெய் குண்டுவீச்சு
10
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சென்னை கே.கே.நகரில் உள்ள வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் முகமூடி அணிந்த மர்ம நபர் மண்ணெண்ணெய் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கே.கே. நகரில் உள்ள சிவலிங்கபுரத்தில் வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. கடந்த 14-ம் தேதி மாலை 6.55 மணி அளவில் முகமூடி அணிந்து இப்பகுதிக்கு வந்த நபர் ஒருவர், மண்ணெண்ணெய் நிரப்பி தயாராக வைத்திருந்த மது பாட்டிலை தீப்பற்ற வைத்து, குடியிருப்பு வளாகத்துக்குள் வீசினார். இதில் அந்த பாட்டில் சத்தத்துடன் வெடித்து சிதறியது. அதிர்ஷ்டவசமாக சேதம் எதுவும் இல்லை.

இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கே.கே.நகர் போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த குடியிருப்பில் வசிக்கும் ராஜன் (53) என்பவரை இலக்காக வைத்து இத்தாக்குதல் நடந்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

ராஜனும், அவரது மகன்களும் கடந்த 11-ம் தேதி கே.கே.நகர் ஒட்டகபாளையம் பகுதியை சேர்ந்த ராகேஷ் என்பவரிடம் தகராறு செய்து கத்தியால் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் ராஜனின் மகன்கள் சதீஷ், விஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட ராகேஷின் நண்பர்கள் இத்தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

Tags: அடககமடக.க.நகரகடயரபபலகணடவசசமணணணணய
Previous Post

அதிரவைக்கும் வீடியோ…! மும்பை-கோவா நான்கு வழிச்சாலையில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலத்தின் நிலையை பாருங்க…

Next Post

தேவர் ஜெயந்தி விழா – முன்னேற்பாடுகளில் தீவிரமாக இறங்கிய இந்திய பார்வர்டு பிளாக்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தேவர் ஜெயந்தி விழா  – முன்னேற்பாடுகளில் தீவிரமாக இறங்கிய இந்திய பார்வர்டு பிளாக்..

தேவர் ஜெயந்தி விழா - முன்னேற்பாடுகளில் தீவிரமாக இறங்கிய இந்திய பார்வர்டு பிளாக்..

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    சென்னை கேகே நகர் போலீஸ் குற்றவாளிகளை விரைவில் தேடி கண்டுபிடித்து கைது செய்ய வேண்டுகிறேன்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In