ஏற்கனவே நீதிமன்ற அறிவுறுத்தல் உள்ளதால் கைது செய்யப்பட்ட பின்னர் கே.சுதாகரன், இரவே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மாநில தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து சனி, ஞாயிறு (இன்றும், நாளையும்) 2 தினங்கள் கறுப்பு தினமாக அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. மாநில தலைவர் கே.சுதாகரன் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக மாநில பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஜாமீனில் விடுவிக்கப்பட்ட கே.சுதாகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எனக்கு நீதிமன்றம் மீது நம்பிக்கை இருக்கிறது. இந்த வழக்கு தகுதியானதா, தகுதியற்றதா என நீதிமன்றம் தீர்மானிக்கட்டும். எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். இந்த வழக்கில் என்னை தண்டிக்க எந்த ஆதாரமும் போலீஸ் வசம் இல்லை என்பதை விசாரணையின்போதே தெரிந்துகொண்டேன். எனக்கு பயமோ, கவலையோ இல்லை. எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்” என்றார்.

