மேலும், `பணம் அல்லது வங்கிக் கடன் உதவிகள் தேவைப்பட்டால், செய்து தருகிறேன்’ என்றும் கனிமொழி ஷர்மிளாவிடம் கூறியிருக்கிறார். அதேபோல பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசனும், ஷர்மிளாவை அழைத்துப் பேசியிருக்கிறார்.
`தைரியமாக இருங்கள். புதிய வாய்ப்புகளை உருவாக்கலாம்’ என்று ஷர்மிளாவுக்கு வானதி சீனிவாசன் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

