நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்திற்குப் பிறகு தனது 170வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தினை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்க இருக்கிறார். படத்தில் நடித்து வரும் நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இதில் நடிகை துஷாரா விஜயன் இணைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
‘சார்பட்டா பரம்பரை’ படம் மூலம் அறிமுகமான நடிகை துஷாரா ‘நட்சத்திரம் நகர்கிறது’, ‘கழுவேத்தி மூர்க்கன்’ போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அவர் இந்தப் படத்தில் இணைவதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

