Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சொத்து குவிப்பு வழக்கு | முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது மனைவி புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 29, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
சொத்து குவிப்பு வழக்கு | முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது மனைவி புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்
14
SHARES
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுக்கோட்டை: சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

கடந்த அதிமுக ஆட்சியில் 2013-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையிலான 8 ஆண்டுகள், விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்தை விட 54 சதவீதம் கூடுதலாக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் பெயரில் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை ஊழல் தடுப்பு போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் அடிப்படையில் கடந்த 2021-ல் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உட்பட 56 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். அதில் ரூ.23 லட்சத்து 85 ஆயிரம், ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 3.75 கிலோ வெள்ளி பொருள், 136 கனரா வாகனப் பதிவு ஆவணங்கள்,19 ஹார்ட் டிஸ்குகள் உள்ளிட்ட சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதன்பின்னர் கடந்த மே மாதம் 216 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இந்த வழக்கின் முதல் விசாரணை கடந்த 5-ம் தேதி தொடங்கிய நிலையில் அன்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். அவரது மனைவி ரம்யா அன்று ஆஜராகவில்லை.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதனையடுத்து நீதிமன்ற வளாகத்தை சுற்றி போலீஸார் குவிக்கப்பட்டனர். மேலும், அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் நீதிமன்ற வளாகத்தில் குவிந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பூரண ஜெய ஆனந்த், இந்த வழக்கை செப்டம்பர் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதையடுத்து நீதிமன்றத்தில் இருந்து விஜயபாஸ்கரும் அவரது மனைவியும். காரில் புறப்பட்டுச் சென்றனர்.

.

Tags: அமசசரஅவரதஆஜரகவபபசததநதமனறததலபதககடடமனவமனனளவழககவஜயபஸகர
Previous Post

நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு: நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் 7 இந்திய உணவுகள்

Next Post

வைரலாகும் வீடியோ… திருவாதிரை நடனமாடி ஓணம் வாழ்த்து சொன்ன வானதி சீனிவாசன்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வைரலாகும் வீடியோ... திருவாதிரை நடனமாடி ஓணம் வாழ்த்து சொன்ன வானதி சீனிவாசன்!

வைரலாகும் வீடியோ... திருவாதிரை நடனமாடி ஓணம் வாழ்த்து சொன்ன வானதி சீனிவாசன்!

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    இவர் விதைத்ததை இவர்தான் அறுவடை செய்ய வேண்டும் . இது காலத்தின் கட்டாயம் முடிவு எப்படி வருகிறது என்று முடிவில் தான் தெரியும் பார்ப்போம்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In