Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“அவதூறு பரப்ப வேண்டாம்; நாங்கள் பேசத் தொடங்கினால்..!" – எடப்படியை எச்சரிக்கும் தங்கம் தென்னரசு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 24, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
``அவதூறு பரப்ப வேண்டாம்; நாங்கள் பேசத் தொடங்கினால்..!" - எடப்படியை எச்சரிக்கும் தங்கம் தென்னரசு
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தற்போது சிங்கப்பூருக்குச் சென்றிருக்கிறார். இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தொழில் முதலீடுகளை ஈர்க்கச் செல்வதாகக் கூறி, தன் குடும்பத்துடன் தனி விமானத்தில் துபாய்க்கு இன்பச்சுற்றுலா சென்றார். அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போதும் இன்பச்சுற்றுலா சென்றிருக்கிறார். இதுவரை முதல்வர் எந்த முதலீட்டையும் ஈர்த்து வந்ததாகத் தெரியவில்லை.

முதல்வர் ஸ்டாலின்

இவர்கள் தங்கள் குடும்பத்தின் ஊழல் பணத்தை முதலீடு செய்யச் சென்றார்கள் என்று மக்களிடையே எழுந்த புகார் குறித்து இதுவரை முதலமைச்சர் தகுந்த விளக்கம் அளிக்கவில்லை” எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ `முதலீட்டை ஈர்க்கப்போகிறாரா அல்லது முதலீடு செய்யப்போகிறாரா?’ என்று தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக முதலமைச்சர் மேற்கொண்டிருக்கும் 9 நாள்கள் வெளிநாட்டுப் பயணத்தைக் கொச்சைப்படுத்தியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அ.தி.மு.க ஆட்சியில் தொழில் வளர்ச்சியைக் காலில் போட்டு மிதித்து, வர விரும்பிய தொழில் நிறுவனங்களையும் அண்டை மாநிலங்களுக்கு விரட்டிவிட்டு ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி. நான்காண்டுக்கால ஆட்சியில் `ஊரெங்கும் ஊழல்’ என்ற முழக்கத்துக்குச் சொந்தக்காரராக, கரன்சி மழையில் நனைந்து ஊழலின் ஒட்டுமொத்த உருவமாகத் திகழ்ந்த எடப்பாடி பழனிசாமி, வெளிப்படைத்தன்மையோடு நடைபெறும் தி.மு.க ஆட்சிமீது ஊழல் புகார் கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்ற கேள்வியை இன்று தமிழ்நாடே கேட்கிறது.

முதல்வர் ஸ்டாலின்

முதலீடு என்றால் தனக்குக் கிடைக்கும் ஊழல் பணம் மட்டுமே என அகராதியில் புதிய அர்த்தம் கண்டுபிடித்த பழனிசாமி, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகளைப் பெறப்போகும் மாண்புமிகு முதலமைச்சர்மீது அவதூறு பேசுகிறார். அந்த அளவுக்கு அவருக்குப் பொறாமையும் எரிச்சலும் மனதுக்குள் கோடை வெயிலைவிட கக்குகிறது. 13 நாள்கள் பயணமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எடப்பாடி பழனிசாமி செல்வதற்கு முன்பு, அவருடைய மகன் மிதுன் அங்கு போனது பழனிசாமியின் ஊழல் பணத்தை முதலீடு செய்வதற்குத்தானோ என்ற கேள்வி இப்போது எழுகிறது.

அ.தி.மு.க-வின் அமைச்சரவையையே ஒவ்வொருவராக வெளிநாடுகளுக்கு அனுப்பி, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கிறேன் என்று கபட நாடகம் நடத்திச் `சுற்றுலா’ சென்றது ஊழல் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்குத்தானா… இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளிநாட்டுக்குச் சென்றிருப்பது பற்றி அவதூறு பரப்பும் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய மகனும், அவரது அமைச்சரவை சகாக்களும் ஏன் சென்றார்கள் என்பதை விளக்குவாரா?

எடப்பாடி பழனிசாமி

கொடநாடு கொலை மற்றும் அங்கு நடைபெற்றதாகக் கூறப்பட்ட தற்கொலைக்கு அடையாளமாக இருந்த மரத்தை வெட்டி சாட்சியங்களை மறைத்தது போன்ற மர்மங்கள் விலகும்போது, எடப்பாடி பழனிசாமியின் உண்மை முகம் தெரியவரும் என்பதில் சந்தேகமில்லை! அதுவரை அவதூறுகளை முதலீடுகளாக வைத்து அசிங்கமான அரசியல் செய்யாமல் இருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு நல்லது.

2015-ம் ஆண்டும் அ.தி.மு.க ஆட்சியில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஓர் `அதிமுக மாநாடு!’ எடப்பாடி பழனிசாமி இருந்தபோது நடத்திய 2019-ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு எடுபடாத மாநாடு! போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என கணக்கு காட்டப்பட்டதே தவிர, வந்த முதலீடுகள் எவ்வளவு என்று நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பார்த்ததில் எடப்பாடி பழனிசாமியின் நிர்வாக லட்சணமும், அவர் முதலீட்டை ஈர்த்த மாயத்தோற்றமும் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

எடப்பாடி பழனிசாமி

இதைத் தொழில்துறை அமைச்சராக இருந்த நான் பல முறை சுட்டிக்காட்டியிருக்கிறேன். உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி நடத்தியது `உலகச் சுற்றுலா மாநாடு!’ ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் அப்படி இல்லை. அ.தி.மு.க ஆட்சியில் 10 ஆண்டுக்காலம் சீரழிந்த நிர்வாகத்தை சீர்ப்படுத்தி வருகிறார். படுபாதாளத்தில் விழுந்து கிடந்த நிதி நிலைமையைச் சரிசெய்து வருகிறார்.

சட்டம் ஒழுங்குக்குச் சவால்விடும் எந்த விவகாரத்தையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு, தவறு செய்வோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கிறார். ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து தொழில் தொடங்க முதலீடுகளைப் பெறுவதை ஒரு முழு முயற்சியாகவும், புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதை தினசரிப் பணியாகவும் செய்து வருகிறார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு

ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு 9 நாள்கள் பயணமாகப் புறப்படும் முன்பு பத்திரிகைக் குறிப்பு வாயிலாகவும், விமான நிலையத்தில் பேட்டி வாயிலாகவும், இதுவரை தொழில்துறையில் பெற்ற முதலீடுகள், போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவற்றை வெளிப்படையாக அறிவித்துவிட்டுச் சென்றிருக்கிறார். ஆனால் இது எதையுமே படிக்காத எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டின் முதலமைச்சரை கீழ்தரமாகப் பேசி – அரசியல் நாகரிகத்துக்கும் தனக்கும் ஆயிரம் மைல் தொலைவு என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்.

முதலமைச்சர் பொறுப்பைத் தக்கவைக்கப் பணம்; ஓ.பி.எஸ் தகராறில் பொதுக்குழுவைக் கூட்டப் பணம்; அதில் மெஜாரிட்டி உறுப்பினர்களைப் பெறப் பணம்; வேண்டிய தீர்மானத்தை நிறைவேற்றப் பணம்; எல்லாவற்றையும்விட, பொதுச்செயலாளர் பதவியைப் பெற பெட்டிப் பெட்டியாகப் பணம் என, கட்சி அரசியலையும், அசிங்கமாக அவர் ஆட்சியில்விட்ட கான்ட்ராக்ட் ஊழல் அரசியல்போல் நடத்திப் பதவியைப் பெற்று, பவனி வந்து கொண்டிருப்பவர் எடப்பாடி பழனிசாமி.

தங்கம் தென்னரசு

அவருக்கு தி.மு.க-வை, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் தி.மு.க ஆட்சியை, திராவிட மாடல் முதலமைச்சரைப் பற்றி குறை கூற தகுதியும் இல்லை, தார்மீக உரிமையும் இல்லை. தங்கள் ஆட்சி ஊழலை மறைக்க இதுபோன்ற அவதூறு பரப்பும் வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். எடப்பாடி பழனிசாமி பாணியிலேயே நாங்கள் பேசத் தொடங்கினால், ஒரு நாள்கூட அவர் நிம்மதியாக இருக்க முடியாது என்று எச்சரிக்க விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

.

Tags: அவதறஎசசரககமஎடபபடயதஙகமதடஙகனல..quotதனனரசநஙகளபசதபரபபவணடம
Previous Post

விருதுநகரில் ரூ.6,000 லஞ்சம் வாங்கிய விஏஓ, கிராம உதவியாளர் கைது

Next Post

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா: திமுக புறக்கணிப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா: திமுக புறக்கணிப்பு

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா: திமுக புறக்கணிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In