வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் 
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு மாதம் ரூ1250 வீதம் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் பூபேஷ் பாகேல் கூறியுள்ளார்.
சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் நவ.,17 ல் நடக்கிறது.
இந்த தேர்தலில், பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும் என பா.ஜ., வாக்குறுதி அளித்திருந்தது.
அதை விட கூடுதலாக முதல்வர் பூபேஷ் பாகேல் அறிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
தீபாவளி திருநாளில், அன்னை லட்சுமியின் ஆசியுடன், பெண்கள் முன்னேற்றத்திற்காக முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளோம். மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன், பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும். இந்த நிதி அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ., வாக்குறுதிக்கு பெண்களிடம் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் அதை எதிர்கொள்ளவும், ஆட்சியை தக்கவைக்கவும் பூபேஷ் பாகேல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

