Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பெண்களுக்கு ரூ.15,000 வழங்கப்படும்: சத்தீஸ்கர் காங்கிரஸ் அறிவிப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 13, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பெண்களுக்கு ரூ.15,000 வழங்கப்படும்: சத்தீஸ்கர் காங்கிரஸ் அறிவிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


 

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு 15,000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் பூபேஷ் பகேல் அறிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் நேற்று (நவம்.12) சத்தீஸ்கர் கிரஹ லட்சுமி யோஜனா திட்டத்தை அறிவித்தார். இதன்கீழ் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண்டுக்கு 15,000 வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: “சத்தீஸ்கர் மாநிலத்தின் மகளிர் சக்திக்காக ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ‘சத்தீஸ்கர் கிரஹ லட்சுமி திட்டத்தை தொடங்குவோம். இத்திட்டத்தின்கீழ் பெண்களுக்கு ஆண்டுக்கு 15,000 ரூபாய் வழங்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நவம்பர் 5-ஆம் தேதி, முதல்வர் பூபேஷ் பகேல், காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் பெண்களுக்கு மானிய விலையில் கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்ற வாக்குறுதிகள் அடங்கிய காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

மேலும் பேசிய பூபேஷ் பகேல், “பாஜகவினரின் உத்தரவாதங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. அவர்கள் அளித்த உத்தரவாதங்கள் அனைத்தும் குப்பைத் தொட்டிக்குச் செல்கின்றன. பாஜக அரசு ஏழை மக்களுக்காக ரேஷன் கார்டுகளை உருவாக்கியது கிடையாது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் அனைவருக்கும் ரேஷன் கார்டு வழங்கினோம். அனைவருக்கும் மின்கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது” என்று கூறினார்.

இதையும் படிக்க: சுரங்கப்பாதை தோண்டும்போது ஏற்பட்ட விபத்தில் 36 பணியாளர்கள் சிக்கியுள்ளனர்!

90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு இருகட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு நவம்.7-ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் நவம். 17-ஆம் தேதி நடைபெறுகிறது.

டிசம்பர் 3-ஆம் தேதி இதற்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…





.

Previous Post

வருகிறது ‘டெவில்’ வால் நட்சத்திரம் வானில் ஒரு அதிசயம்

Next Post

சத்தீஸ்கரில் பெண்களுக்கு மாதம் ரூ.1250: ஆட்சியை தக்க வைக்க காங்., வாக்குறுதி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சத்தீஸ்கரில் பெண்களுக்கு மாதம் ரூ.1250:  ஆட்சியை தக்க வைக்க காங்., வாக்குறுதி

சத்தீஸ்கரில் பெண்களுக்கு மாதம் ரூ.1250: ஆட்சியை தக்க வைக்க காங்., வாக்குறுதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In