சந்திரமுகி 2 பட இயக்குநர் பிரபல யூ-டியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
ராகவா லாரன்ஸ், கங்கனா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்து இருக்கும் படம், சந்திரமுகி 2. இப்படத்தை பி.வாசு இயக்கி உள்ளார். படத்தின் விளம்பர பணியில் படக்குழு ஈடுபட்டு உள்ளது. சமீபத்தில் படத்தின் இயக்குநர் பிரபல யூ-டியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில், “தற்செயலாக கங்கனாவுக்கு சந்திரமுகி 2 பட வாய்ப்பு கிடைத்தது. கங்கனாவுக்காக வேறொரு கதையை தயார் செய்து வைத்து இருக்கிறேன். அதை முடித்த பிறகு கதையை கங்கனாவிடம் சொன்னேன். கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இரண்டு, மூன்று இடங்களில் கண்களில் நீர் வடிந்தது சார், இது ஒரு வித்தியாசமான படம் என சொன்னார். அதன் பிறகு இப்போது என்ன படம் செய்கிறீர்கள் என்று கேட்டார்.
சந்திரமுகி 2 என்றேன். நீங்கள் அந்த படத்தை செய்தீர்கள், மன்னிக்கவும் நான் மறந்துவிட்டேன் என்று கங்கனா சொன்னார். சந்திரமுகி வேடத்தில் யார் நடிக்கிறார்கள் என்றும் கேட்டார். நான் முடிவு செய்யவில்லை என பதிலளித்தேன். அந்த உரையாடல் முடிந்தது. சென்னைக்கு நான் வந்த பிறகு கங்கனா போன் செய்து சந்திரமுகி படத்தில் நான் நடிக்கிறேன் எனச் சொன்னார்.
கங்கனா தன் வாழ்நாளில் ஸ்கிரிப்ட் படம் நடிப்பது இல்லை. கதையோ, காட்சியோ தெரியாமல் இரண்டு நாள் டேட் கொடுங்கள் என சொன்னேன். இரண்டு நாட்களுக்கு ஒரு கூட்டு காட்சி உள்ளது. மேலும் ஒரு மாதம் கழித்து கால்ஷீட் கொடுத்தார்.
பிறகு கங்கனா வந்து இரண்டு நாட்கள் ஆனாது. சீன் சொல்லாமல் அவரின் காட்சிகளை எடுத்தேன். அதன் பிறகு கதை சொல்லப்பட்டது. கேரக்டரில் ஆர்வமுள்ள ஒரு கலைஞரை வைத்து படம் செய்வதை விட பெரிய மகிழ்ச்சி வேறில்லை.
சந்திரமுகி படத்தில் கங்கனாவின் நடிப்பு பேசும். அவர் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். சந்திரமுகி 2 படத்தின் கதை ரஜினிக்கு தெரியாது. கதை பிடிக்காததால் ராகவா லாரன்ஸை அணுகியதாகக் கூறப்படுகிறது. அந்த செய்தி தவறானது. ஆனால் பரவாயில்லை பேசுபவர்கள் பேசட்டும்” என்றார்.

