Wednesday, November 4, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வில்லிவாக்கம் தனியார் காப்பகத்தில் சிறுவனை துன்புறுத்தியதாக பாஜக பெண் பிரமுகர் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 23, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
வில்லிவாக்கம் தனியார் காப்பகத்தில் சிறுவனை துன்புறுத்தியதாக பாஜக பெண் பிரமுகர் கைது
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் காப்பகத்தில், சிறுவன் துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில் பாஜக பெண் பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

வில்லிவாக்கம் ராஜாஜி நகர் சிவன் தெருவைச் சேர்ந்தவர் சரண்யா(33). வழக்கறிஞர். இவரது மகன் தருண் சாய். சரியாகப் பேச முடியாத தனது மகனை, பகல் நேரத்தில் கவனித்துக் கொள்வதற்காக, வில்லிவாக்கம் சிட்கோ நகர் முதலாவது தெருவில் உள்ள ஒரு தனியார் காப்பத்தில் விடுவது வழக்கம்.

இந்த காப்பகத்தை, வில்லிவாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த மீனாட்சி (42) என்பவர் நடத்தி வருகிறார். இவர், பாஜக மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கிறார். இந்நிலையில், வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் அண்மையில் சரண்யா புகார் மனு அளித்திருந்தார்.

அதில், தனியார் காப்பகத்தில் தனது மகன் தருண் சாய் தாக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டதாகவும், இது குறித்து கேட்டபோது காப்பக நிர்வாகி மீனாட்சி மிரட்டியதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்தனர்.

இதில், மீனாட்சி மீதான புகார் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், மீனாட்சியைக் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

.

Tags: கதகபபகததலசறவனதனபறததயதகதனயரபணபரமகரபஜகவலலவககம
Previous Post

பாட்னாவில் எதிர்க்கட்சிகள் போட்டோ செசன் நடக்குது.. 300 இடங்களுக்கு மேல நாங்கதான் ஜெயிப்போம்-அமித்ஷா!

Next Post

C.V.சண்முகம் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
C.V.சண்முகம் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

C.V.சண்முகம் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In