சண்டாளர் என்ற சாதிப் பெயரை பயன்படுத்த தடை விதித்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பட்டியலினத்தில் உள்ள இந்தப் பிரிவினரை வசைபாடுவதற்கு பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். தமிழ்நாட்டில் பட்டியலின சாதிப் பிரிவு பட்டியலில் 48-வதாக சண்டாளர் என்ற சாதிப் பெயர் உள்ளது. அண்மைக் காலங்களில் பிறரை இழிவுபடுத்தும் நோக்கில் இப்பெயர் பொதுவெளியில் சமூக ஊடகங்களில் அழுத்தமாக பேசப்படுகிறது.
பிறரை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் நகைச்சுவையாகவோ, பொது வெளியிலோ சண்டாளர் என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

