அந்த தொழிலதிபர் பொதுமக்களுக்கு பாடம் புகட்ட நினைத்ததால் தான், நீங்கள் (காவல்துறையினர்) அனைவரும் அவருடைய கட்டளைப்படி செயல்பட்டீர்கள். 2018-ம் ஆண்டு நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து வேதாந்தா நிறுவனத்தை மறைமுகமாக விமர்சித்து சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ விசாரணை சரியில்லை; இத்தனை ஆண்டுகளாக சிபிஐ விசாரணை நடத்தியும் பலனில்லை, வழக்கு தொடர்பாக 2 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய அரசு அதிகாரிகளின் சொத்துகளை கணக்கிடவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மிகவும் சிறப்பானது வரவேற்கப்பட வேண்டியது. இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதி போன்ற நபர்களால் தான் ஏழை மக்களும் நடுத்தர மக்களும் இன்று வரை வாழ முடிகிறது. மற்றபடி அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அதாவது ஆளுங்கட்சியினரும் சேர்ந்தே பணத்திற்காக அதாவது கூலிக்காக மக்களை அழிக்க துடிக்கின்றனர்