Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Awaiting a call from Uddhav: Maharashtra CM Fadnavis attends an event alongside the Thackeray brothers-உத்தவ் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: தாக்கரேசகோதரர்களுடன் ஒரே நிகழ்ச்சியில்பங்கேற்ற மகா.முதல்வர் பட்னாவிஸ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 31, 2026
in அரசியல் செய்திகள்
0
Awaiting a call from Uddhav: Maharashtra CM Fadnavis attends an event alongside the Thackeray brothers-உத்தவ் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: தாக்கரேசகோதரர்களுடன் ஒரே நிகழ்ச்சியில்பங்கேற்ற மகா.முதல்வர் பட்னாவிஸ்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மகாராஷ்டிராவில் கடந்த 2022ம் ஆண்டு சிவசேனா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இரண்டாக உடைந்தது. இதற்கு தற்போதைய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்தான் காரணம் என்று பரவலாக பேசப்பட்டது. கட்சி இரண்டாக உடைந்ததால் உத்தவ் தாக்கரேயிடமிருந்து சிவசேனா பறிபோனது. இதே போன்று மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியை தங்களது கூட்டணியில் சேர்ப்பதாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உறுதியளித்துவிட்டு கடைசி நேரத்தில் கைவிட்டுவிட்டார். இதனால் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகிய இரண்டு பேரும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

இந்நிலையில் புதிய திருப்பமாக மும்பை தாதரில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் தேவேந்திர பட்னாவிசுடன் உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரே ஒன்றாக கலந்து கொண்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், மூவரும் தனித்தனியாக உரையாடும் காணொலி வைரலாகி இருக்கிறது.

இதில் தேவேந்திர பட்னாவிஸ், உத்தவ் தாக்கரேயுடனான பழைய உறவு குறித்து பேசுகையில், 2019 க்கு முன்பு உத்தவ் தாக்கரே அழைத்த போதெல்லாம் பதிலளித்திருக்கிறேன்.

ஆனால் அன்றிலிருந்து உத்தவ் தாக்கரேயின் அழைப்பிற்காக காத்திருக்கிறேன். 2019 வரை, உத்தவ்-ஜி என்னை அழைத்த போதெல்லாம், நான் சென்றேன். 2019 க்குப் பிறகு, அவர் அழைக்கவில்லை. நான் அவரது அழைப்புக்காக காத்திருக்கிறேன்,” என்று பட்னாவிஸ் கூறினார். தேவேந்திர பட்னாவிசின் இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதில் பேசிய ராஜ் தாக்கரே, சில தளங்கள் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து தலைவர்கள் கலை மற்றும் கலாச்சாரத்திற்காக ஒன்று சேர அனுமதிக்கின்றன என்று தெரிவித்தார். ஆனால் ஒரே மேடையில் மூன்று பேரும் ஒன்றாக கலந்துகொண்டதில் எந்த வித அரசியலும் இல்லை என்று ராஜ் தாக்கரேயும், உத்தவ் தாக்கரேயும் தெரிவித்துள்ளனர்.



.

Previous Post

“விவசாயிகளே நாட்டின் பலம் வாய்ந்த தூண்கள்”- குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

Reliance Digital | ரிலையன்ஸ் ரீடெய்ஸ்-ன் 2ம் காலாண்டு நிகர லாபம் 24.5% சரிவு… வருவாய் 6.4% அதிகரிப்பு! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Reliance Digital | ரிலையன்ஸ் ரீடெய்ஸ்-ன் 2ம் காலாண்டு நிகர லாபம் 24.5% சரிவு… வருவாய் 6.4% அதிகரிப்பு! | India News (இந்தியா செய்திகள்)

Reliance Digital | ரிலையன்ஸ் ரீடெய்ஸ்-ன் 2ம் காலாண்டு நிகர லாபம் 24.5% சரிவு... வருவாய் 6.4% அதிகரிப்பு! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In