Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Reliance Digital | ரிலையன்ஸ் ரீடெய்ஸ்-ன் 2ம் காலாண்டு நிகர லாபம் 24.5% சரிவு… வருவாய் 6.4% அதிகரிப்பு! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 31, 2026
in அரசியல் செய்திகள்
0
Reliance Digital | ரிலையன்ஸ் ரீடெய்ஸ்-ன் 2ம் காலாண்டு நிகர லாபம் 24.5% சரிவு… வருவாய் 6.4% அதிகரிப்பு! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 31, 2026 9:22 AM IST

இந்த காலாண்டில் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 7 சதவீதம் அதிகரித்துள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் டிஜிட்டல்
ரிலையன்ஸ் டிஜிட்டல்

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சில்லறை வர்த்தகப் பிரிவான ரிலையன்ஸ் ரீடெய்ல், நடப்பு நிதியாண்டின் (FY27) செப்டம்பர் காலாண்டில் லாபத்தில் 24.5 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.3,469 கோடியாக இருந்த வரிக்குப் பிந்தைய லாபம் (PAT), இந்த ஆண்டு ரூ.2,619 கோடியாகக் குறைந்துள்ளது. அதேசமயம், நிறுவனத்தின் மொத்த வருவாய் 6.43 சதவீதம் அதிகரித்து ரூ.86,169 கோடியிலிருந்து ரூ.91,716 கோடியாக உயர்ந்துள்ளது.

ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 5.78 சதவீதம் அதிகரித்து ரூ.75,836 கோடியிலிருந்து ரூ.80,220 கோடியாக உயர்ந்துள்ளது. இருப்பினும், பண்டிகைக் கால விற்பனை டிசம்பர் காலாண்டுக்கு (Q3) மாறியதால் செப்டம்பர் காலாண்டின் செயல்பாடு பாதிக்கப்பட்டதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், செயல்பாடுகள் மூலம் கிடைத்த EBITDA 11.1 சதவீதம் குறைந்து ரூ.6,624 கோடியிலிருந்து ரூ.5,886 கோடியாக உள்ளது. ஒருமுறை ஏற்படும் மதிப்பிழப்பு செலவுக்கு முந்தைய EBITDA 8.6 சதவீதம் சரிந்து ரூ.6,228 கோடியாகப் பதிவாகியுள்ளது. டிஜிட்டல் வர்த்தகத்தில் திட்டமிட்ட முதலீடுகள், வாடிக்கையாளர்களுக்கு விலை உயர்வைச் சுமத்தாமல் உள்ளீட்டுச் செலவுகளை ஏற்றுக்கொண்டது மற்றும் பண்டிகைக் கால மாற்றம் ஆகியவை லாப வரம்பில் 120 அடிப்படைப் புள்ளிகள் சரிவுக்கு காரணமாக இருந்ததாக நிறுவனம் கூறியுள்ளது.

இந்த காலாண்டில் ரிலையன்ஸ் ரீடெய்ல் தனது விற்பனை வலையமைப்பில் புதிதாக 303 கடைகளைத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில், லாபகரமாகச் செயல்படாத கடைகள் மூடப்பட்டதால் நிகர அளவில் 222 கடைகள் குறைந்துள்ளன. இதன் மூலம் செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி மொத்தக் கடைகளின் எண்ணிக்கை 0.6 சதவீதம் அதிகரித்து 19,947 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்த எண்ணிக்கை 19,821 ஆக இருந்தது. மேலும் நிறுவனத்தின் மொத்த சில்லறை விற்பனைப் பரப்பளவு 0.4 சதவீதம் குறைந்து 77.8 மில்லியன் சதுர அடியிலிருந்து 77.5 மில்லியன் சதுர அடியாக உள்ளது.

இதுகுறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி கூறுகையில், அனைத்து வர்த்தகப் பிரிவுகளிலும் விற்பனை வளர்ச்சி சீராக இருந்ததாகவும், நேரடி மற்றும் டிஜிட்டல் விற்பனைத் தளங்கள் மூலம் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறுவனம் தொடர்ந்து பூர்த்தி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ்: 2-வது காலாண்டில் நிகர லாபம் 13.7% உயர்வு.. வருவாய் 11.4% அதிகரிப்பு!

மேலும், நிறுவனத்தின் நுகர்வோர் பொருட்கள் பிரிவு தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருவதாகவும், அதன் FMCG பிராண்டுகள் இந்திய நுகர்வோர் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். முக்கியப் பண்டிகைகள் அடுத்த காலாண்டுக்கு மாறியிருந்தபோதிலும், இந்த காலாண்டில் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 7 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.



.

Previous Post

Awaiting a call from Uddhav: Maharashtra CM Fadnavis attends an event alongside the Thackeray brothers-உத்தவ் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: தாக்கரேசகோதரர்களுடன் ஒரே நிகழ்ச்சியில்பங்கேற்ற மகா.முதல்வர் பட்னாவிஸ்

Next Post

கோவை மத்திய சிறையில் இருந்து விசாரணைக் கைதி தப்பியோட்டம்|Another Prison Escape in Tamil Nadu: One Inmate Flees in Coimbatore

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கோவை மத்திய சிறையில் இருந்து விசாரணைக் கைதி தப்பியோட்டம்|Another Prison Escape in Tamil Nadu: One Inmate Flees in Coimbatore

கோவை மத்திய சிறையில் இருந்து விசாரணைக் கைதி தப்பியோட்டம்|Another Prison Escape in Tamil Nadu: One Inmate Flees in Coimbatore

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In