முன்னாள் முதலைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிறைவு மற்றும் 101வது பிறந்த தினத்தையொட்டி, மதுரை கூடல்நகர் பகுதியில், கலைஞர் திருவுருவப்படத்திற்கு திமுக மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ஜி.பி.ராஜா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அய்யப்பன் ஆகியோர் தலைமையில், மதுரை மாநகர் மாவட்ட 2வது வட்ட திமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பிறகு அப்பகுதியிலுள்ள மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி, நுங்கு, வெள்ளரி ஆகியவை திமுகவினர் சார்பில் வழங்கப்பட்டது.


❤️❤️❤️