“கோயம்பேடு மார்க்கெட் அகற்றப்படுகிறது’…’கோயம்பேடு பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்படுகிறது’ என்று கோயம்பேடு பற்றிய ஒவ்வொரு அறிவிப்பு வரும்போதும், ‘அந்த இடம் அப்படி மாறப்போகிறது… இந்த மால் வரப்போகிறது’ என்று ஏகப்பட்டு கருத்துகள் பரவும்.
ஆனால் அப்போதிருந்து இப்போது வரை கோயம்பேட்டில் உள்ள மார்க்கெட், பேருந்து நிலைய இடத்தை பசுமை பூங்காவாக மாற்ற வேண்டும் என்று பா.ம.க கூறி வருகிறது. இந்த நிலையில், தற்போது கிண்டி ரேஸ் கிளப் நிறுவனத்திற்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்ட நிலம், மீட்கப்பட்டு சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற உள்ளதை தொடர்ந்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தன் எக்ஸ் பக்கத்தில் சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்…
அதில் அவர், “கிண்டியில் மீட்கப்பட்ட நிலத்தில் 118 ஏக்கர் பரப்பில்
பசுமைப்பூங்கா அமைப்பது வரவேற்கத்தக்கது:
கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் பூங்கா தேவை!
சென்னையில் கிண்டி ரேஸ் கிளப் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டு மீட்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்தில், அரசுப் புறம்போக்கு என்னும் வகைப்பாட்டில் இருக்கும் 118 ஏக்கர் நிலத்தில் மிகச்சிறந்த சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதற்காக சம்பந்தப்பட்ட நிலத்தை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
