Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தமிழகத்திலிருந்து திருடப்பட்டு ரூ.5.2 கோடிக்கு விற்றது அம்பலம்: சோழர்கால கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 6, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தமிழகத்திலிருந்து திருடப்பட்டு ரூ.5.2 கோடிக்கு விற்றது அம்பலம்: சோழர்கால கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: தமிழகத்திலிருந்து திருடப்பட்ட பிற்கால சோழர்கால கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் இருப்பதை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸார் கண்டறிந்துள்ளனர். அதை மீட்டு தமிழகத்துக்கு கொண்டுவரும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்ட விலைமதிக்க முடியாத பழங்கால சிலைகள் அமெரிக்கா உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு அடுத்தடுத்து கடத்திச் செல்லப்பட்டது. கோடிக்கணக்கான பணத்துக்கு அதைவிற்று பணம் சம்பாதித்ததாக சிலைகடத்தல் மன்னன் சுபாஷ் கபூர்வெளிநாட்டில் கைது செய்யப்பட்டு தமிழக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர், அவர் சிறையிலடைக்கப்பட்டார்.

அவரால் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்ட சிலைகள் உள்பட ஏராளமான சிலைகள் தற்போது வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டு தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டு திருடப்பட்ட இடத்திலேயே நிறுவப்பட்டு வருகிறது.

ரூ.5.2 கோடிக்கு விற்பனை: இந்நிலையில், சுபாஷ்கபூரால் தமிழக கோயில் ஒன்றிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட பிற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்த கலிய கல்கி என்ற கலிய மர்த்தன கிருஷ்ணர் (பாம்பின் மேல் நடனமாடும் கிருஷ்ணர்) உலோகச் சிலை ஒன்று தற்போது அமெரிக்காவில் உள்ள கலைக்கூடம் ஒன்றில் இருப்பதை தமிழக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸார் கண்டறிந்துள்ளனர்.

இந்த சிலை காளிங்கன் என்ற 5 தலை பாம்பின் மேல் கிருஷ்ணர் நடனமாடுவதைப்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2005-ம்ஆண்டு சிலை கடத்தல் மன்னன்சுபாஷ் கபூரால் கடத்தி செல்லப்பட்டு, ரூ.5.2 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதும் அம்பலமாகி உள்ளது.சோழர்காலமான 11 – 12ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சிலையை போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக கடத்திச் சென்றுள்ளனர்.

இந்த சிலை தமிழ்நாட்டில் உள்ள எந்த கோயிலில் திருடப்பட்டது என்பதை கண்டுபிடிக்கும்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபிசைலேஷ்குமார் யாதவ், ஐஜிதினகரன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, ஆய்வாளர் காவேரியம்மாள் விசாரணை மேற்கொண்டுள்ளார். விலை மதிப்புமிக்க இந்த நடனமாடும் கிருஷ்ணர் சிலையை அமெரிக்காவில் இருந்து தமிழ்நாட்டுக்கு மீட்டுக்கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

.

Tags: அமபலமஅமரககவலகடகககணடபடபபகரஷணரசலசழரகலதமழகததலரநததரடபபடடர.5.2வறறத
Previous Post

துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி சேர்ப்பா? : ஆளுநருக்கு தமிழக அரசு விளக்கம்

Next Post

பவானி ஆற்றை பரிசலில் கடக்கும் மக்கள்: பாலம் கட்டித் தர கோரிக்கை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பவானி ஆற்றை பரிசலில் கடக்கும் மக்கள்: பாலம் கட்டித் தர கோரிக்கை

பவானி ஆற்றை பரிசலில் கடக்கும் மக்கள்: பாலம் கட்டித் தர கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In