ஸ்வாதி மாலிவால் குறிப்பிடும் அப்சல் குரு, 2001-ம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்வாதி மாலிவாலின் இத்தகைய விமர்சனத்துக்கு எதிர்வினையாற்றியிருக்கும் ஆம் ஆத்மி, எம்.பி பதவியை ராஜினாமா செய்யுமாறு அவரை வலியுறுத்தியிருக்கிறது.

இதுபற்றி ஆம் ஆத்மி மூத்த தலைவர் திலீப் பாண்டே, “ஸ்வாதி மாலிவால், ஆம் ஆத்மியிலிருந்து ராஜ்யசபா எம்.பி – யாக இருந்துகொண்டு, பா.ஜ.க-வின் ஸ்கிரிப்டை வெளிப்படுத்துகிறார். அவருக்குச் சிறிதேனும் மானம் இருந்தால், எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.க மூலம் ராஜ்யசபாவுக்கு செல்லும் வழியைத் தேர்வுசெய்யட்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, மக்களவைத் தேர்தல் சமயத்தில் இடைக்கால ஜாமீனில் வெளிவந்த கெஜ்ரிவாலைச் சந்திக்கச் சென்றபோது அவரின் உதவியாளரால் தாக்கப்பட்டதாக ஸ்வாதி மாலிவால் புகாரளித்ததும், பின்னர் கெஜ்ரிவாலின் உதவியாளர் கைதுசெய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

