Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“ஆட்சி இருக்கும் வரை தான் திமுக அமைச்சர்களுக்கு பாதுகாப்பு”- டிடிவி தினகரன் பேச்சு! | Security for DMK ministers only till there is government -TTV Dhinakaran

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 18, 2024
in அரசியல் செய்திகள்
0
“ஆட்சி இருக்கும் வரை தான் திமுக அமைச்சர்களுக்கு பாதுகாப்பு”- டிடிவி தினகரன் பேச்சு! | Security for DMK ministers only till there is government -TTV Dhinakaran
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சட்டம் ஒழுங்கு..

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. காவல்துறை கைகள் கட்டப்பட்டு ஏவல் துறையாக மாறியுள்ளது. ஆளும் கட்சியின் நிர்வாகிகளின் துணையோடு அதிகாரிகளை மிரட்டும் செயல் நடைபெற்று வருகிறது. 23 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் போதை மருந்து கலாச்சாரத்திற்கு அடிமையாகி 5000 ரூபாய்க்கும், 10000 ரூபாய்க்கும் கூலிப்படைகளாக மாறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தை தவிர தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை செய்யாததால் ஆசிரியர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் என அனைத்து துறையினரும் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டணி கட்சியில் உள்ள திருமாவளவனே மது ஒழிப்பை அமல்படுத்த மாநாடு நடத்தும் அளவிற்கு சென்றுவிட்டது.

டிடிவி தினகரன்டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

தி.மு.க ஆட்சியே காரணம்..

அ.தி.மு.க. ஆட்சியில் எதற்கெல்லாம் மு.க.ஸ்டாலின் போராடினாரோ அதே கோரிக்கைகளுக்கு இன்று போராடுபவர்களை கைது செய்கிறார். தமிழகத்தில் போராட்டம் நடத்தாத துறையே இல்லை. தமிழகத்தில் விதவிதமான போதை பொருள்கள் புழக்கத்திற்கு வந்துள்ளது. போதைக்கு அடிமையானவர்கள் நாள்போக்கில் பைத்தியம் ஆவார்கள் அல்லது கொலையாளியாக மாறுவார்கள். தமிழகத்தில் கூலிப்படை அதிகரிக்க தி.மு.க ஆட்சியே காரணம்.

பா.ஜ.க வை, தி.மு.க வினர் வெளியே விமர்சித்து பேசுவார்கள். ஆனால் பா.ஜ.க விடம், தி.மு.க மண்டியிட்டு நிற்கும் அளவுக்கு ஊழல் செய்துள்ளார்கள். விருதுநகர் அமைச்சர்கள் கூட ஊழலில் சிக்கி உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளார்கள். ஆட்சி இருக்கும் வரைதான் இவர்களுக்கு பாதுகாப்பு.

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 2026ல் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். பிரதமர் மோடி வந்த பின்னர்தான் இந்தியாவில் தீவிரவாதம் குறைந்துள்ளது. சிறுபான்மையினரிடம் பொய் சொல்லி ஸ்டாலின் அவர்களது வாக்குகளை பெற்று வருகிறார். அதை அவர்கள் புரிந்து கொள்ள தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் 2026ல் உறுதியாக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்திலிருந்து, 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லிக்கு சென்று வெறுமனே ரொட்டியும், பிரியாணியும் மட்டுந்தான் சாப்பிட்டு வருகிறார்கள். வேறெதும் அவர்கள் செய்யவில்லை” என விமர்சித்து பேசினார்.



.

Previous Post

"வண்டியை திடலுக்கு விடுங்கண்ணே…" – விஜய்யின் பெரியார் திடல் விசிட் பின்னணி

Next Post

`டம்மி முதல்வர் அதிஷி’ – சாடும் ஸ்வாதி மாலிவால்; MP பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தும் ஆம் ஆத்மி | Aam Aadmi asks swati maliwal to resign MP post after she criticize atishi

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`டம்மி முதல்வர் அதிஷி’ – சாடும் ஸ்வாதி மாலிவால்; MP பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தும் ஆம் ஆத்மி | Aam Aadmi asks swati maliwal to resign MP post after she criticize atishi

`டம்மி முதல்வர் அதிஷி' - சாடும் ஸ்வாதி மாலிவால்; MP பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தும் ஆம் ஆத்மி | Aam Aadmi asks swati maliwal to resign MP post after she criticize atishi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In