Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆவணம் ஏதுமின்றி ரூ.11.98 லட்சத்தை எடுத்துவந்த நபர் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 24, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆவணம் ஏதுமின்றி ரூ.11.98 லட்சத்தை எடுத்துவந்த நபர் கைது
7
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எவ்வித ஆவணமும் இன்றி ரூ.11.98 லட்சம் பணத்தை எடுத்துவந்த ஆந்திராவைச் சேர்ந்த நபரை ஆர்பிஎஃப் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பார்சல் அலுவலகத்தில் ஆர்பிஎஃப் தலைமைக் காவலர் தினேஷ்குமார் நேற்று காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமானமுறையில் ஒருநபர் பையுடன் நின்று கொண்டிருந்தார். அவரைப் பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாகப் பேசினார். தொடர்ந்து, அவரது பையைவாங்கி சோதித்தபோது, அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது.

உடனடியாக, அவரை ஆர்பிஎஃப் அலுவலகத்துக்கு அழைத்துவந்து, விசாரித்தபோது, அந்த நபர் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்த மாடவாசு(42) என்பதும், அவர் ரூ.11.98 லட்சத்தை எந்தவித ஆவணமுமின்றி ரயிலில் எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த பணத்தை ஆர்பிஎஃப் போலீஸார் பறிமுதல் செய்தனர். அவரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில், வருமான வரித்துறை அதிகாரிகள் விரைந்து வந்து, அப்பணத்தைக் கைப்பற்றி, மாடவாசுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

Tags: ஆவணமஎடததவநதஏதமனறகதசனடரலநபரநலயததலர.11.98ரயலலடசதத
Previous Post

புதுச்சேரி…. சந்திராயன் நிலவில் தரயிரங்கியதை கோலமாவில் ரங்கோலியாக வரைந்து அசத்திய பெண் ஓவியர்!

Next Post

நாகை | அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் போராட்டம்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நாகை | அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் போராட்டம்.

நாகை | அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் போராட்டம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In