Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தொழிலதிபரையும், மனைவியையும் கட்டிப்போட்டு கொள்ளையடித்த வழக்கில் உறவினர், பெண் டெய்லர் உட்பட 3 பேர் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 25, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தொழிலதிபரையும், மனைவியையும் கட்டிப்போட்டு கொள்ளையடித்த வழக்கில் உறவினர், பெண் டெய்லர் உட்பட 3 பேர் கைது
20
SHARES
32
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: கட்டுமான தொழிலதிபரையும், அவரது மனைவியையும் கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த வழக்கில் பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளை பின்னணி பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை வில்லிவாக்கம், சிட்கோநகர் 2-வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சோழன் (66). இவரது மனைவி வனஜா (60). சோழன் சொந்தமாக பில்டிங் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த வியாழன் இரவு தம்பதியர் வழக்கம்போல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை 3 மணியளவில் வீட்டின் கதவை தட்டிய 5 பேர் கும்பல், சோழன் கதவை திறந்த உடன் அவரை தாக்கினர்.

75 சவரன் நகை கொள்ளை: பின்னர் அவரையும் அவரது மனைவியையும் கை, கால்களை கட்டிப் போட்டுவிட்டு வீட்டில் இருந்த 75 சவரன் நகை, ரூ.3.50 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பினர். திரைப்பட பாணியில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் குறித்து வில்லிவாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். முதல் கட்டமாக கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் துப்பு துலக்கப்பட்டது.

சோழன் தங்கியுள்ள குடியிருப்பில் அவரது அக்கா மகன் ராமர் (45) என்பவர் குடும்பத்துடன் தங்கியுள்ளார். இவர், அண்ணா நகரில் கடை நடத்தி வருகிறார். இவரது நண்பர் மேற்கு முகப்பேரை சேர்ந்த முகமது பக்ருதீன் (42). இவர் எல்.ஐ.சி. காலனியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் டெய்லராக பணி செய்து வருபவர் கொரட்டூரை சேர்ந்த ராதா (47). இவர் கணவரை இழந்து பண கஷ்டத்தில் இருந்து வந்தார்.

கடன் தராததால் ஆத்திரம்: முகமது பக்ருதீன் வங்கியில் வீட்டு கடன் பெற்று வீடு கட்டியுள்ளார். வங்கி கடன் முறையாக கட்டமுடியாமல் நெருக்கடியில் இருந்ததால், வீட்டை விற்பனை செய்ய முயன்றார். ராமர் உதவியுடன் சோழனிடம் வீட்டை விற்பனை செய்ய முயன்றனர். அவர் மறுக்கவே ரூ.5 லட்சம் கடன் அளிக்கும்படி ராமர் கேட்டுள்ளார். அதற்கும் சோழன் மறுத்துள்ளார்.

இதில், ஆத்திரமடைந்த ராமர், முகமது பக்ருதீன் மற்றும் ராதா ஆகியோர் சேர்ந்து சோழன் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டனர். அதன்படி, ஆவடியை சேர்ந்த கூலிப்படையை ஏற்பாடு செய்து, வீட்டை அடையாளம் காட்டியது தெரியவந்தது. இதையடுத்து, ராமர், முகமது பக்ருதீன் மற்றும்ராதா ஆகிய 3 பேரை வில்லிவாக்கம் போலீஸார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

அவர்களிடம் இருந்து, 20.5 சவரன் நகை, 24 கிராம் வெள்ளி, ரூ. 5 ஆயிரம், இரண்டு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், தலைமறைவாக உள்ள கூலிப்படையை சேர்ந்தவர்களை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

.

Tags: உடபடஉறவனரகடடபபடடகதகளளயடததடயலரதழலதபரயமபணபரமனவயயமவழககல
Previous Post

தீவிரமாகும் போராட்டம்..! – கம்பெனிகள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு..!

Next Post

பெங்களூர் பந்த் : இன்போசிஸ் வெளியிட்ட அறிவிப்பு.. தலையணை படுக்கை உடன் ரெடியான ஐடி ஊழியர்கள்..!!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பெங்களூர் பந்த் : இன்போசிஸ் வெளியிட்ட அறிவிப்பு.. தலையணை படுக்கை உடன் ரெடியான ஐடி ஊழியர்கள்..!!

பெங்களூர் பந்த் : இன்போசிஸ் வெளியிட்ட அறிவிப்பு.. தலையணை படுக்கை உடன் ரெடியான ஐடி ஊழியர்கள்..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In