Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பெங்களூர் பந்த் : இன்போசிஸ் வெளியிட்ட அறிவிப்பு.. தலையணை படுக்கை உடன் ரெடியான ஐடி ஊழியர்கள்..!!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 25, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், சினிமா செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பெங்களூர் பந்த் : இன்போசிஸ் வெளியிட்ட அறிவிப்பு.. தலையணை படுக்கை உடன் ரெடியான ஐடி ஊழியர்கள்..!!
89
SHARES
144
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பெங்களுரு : காவிரி நீர் தொடர்பாக கர்நாடகா மாநிலம் முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டு இருக்கும் வேளையில் தலைநகரான பெங்களூரில் போராட்டம் எல்லை பகுதிகளில் மிகவும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பள்ளி, கல்லூரி, ஐடி அலுவலகங்கள் முதல் அனைத்தும் நாளை மூடப்பட உள்ளது.

இந்த வேளையில் இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் தனது ஊழியர்களுக்கு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. பல அமைப்புகள் நாளை அலுவலகங்களை மூட வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அனைத்து தரப்பு நிறுவனங்களும் முன்னெச்சரிகை விடுத்துள்ளது.

இதன் மூலம் இன்போசிஸ் தனது பெங்களூர் ஊழியர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பில் பல பொது மற்றும் தனியார் சேவைகள் நாளை இயங்காது என்பதால் BCP திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. செப்டம்பர் 26 ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் அலுவலகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள், அனைவருக்கும் வொர்க் ப்ரம் ஹோம்.

இதேவேளையில் முக்கியமான வர்த்தக பணிகள் ஏதேனும் இருந்தால், ஊழியர்கள் திங்கட்கிழமை அதாவது செப்டம்பர் 25 ஆம் தேதி இரவு அலுவலகத்தில் தங்கி பணியாற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் இதற்கான ஒப்புதலை முன்கூட்டியே ஐடி ஊழியர்கள் தங்களுடைய டெலிவரி மேனேஜர் உடன் பெற வேண்டும் என்பதை கட்டாயம் என்றும் தெரிவித்துள்ளது.

இதனால் பெங்களூர் இன்போசிஸ் அலுவலகத்தில் சில பல ஊழியர்கள் தங்கி பணியாற்ற வேண்டிய சூழ்நிலை இருப்பதால் படுக்கை, தலையணை உடன் ரெடியாகியுள்ளனர். கிட்டத்தட்ட இதே அறிவிப்பை தான் பிற பெங்களூர் ஐடி நிறுவனங்கள் அறிவிக்கும், பெரும்பாலான நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் வாயிலாக கர்நாடகா பந்த் பிரச்சனையை சரி செய்துவிடும்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWRC) பரிந்துரையின் பேரில், தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு கூடுதலாக 5,000 கனஅடி நீரை தொடர்ந்து திறந்துவிடுமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) கர்நாடகாவுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் காவிரியில் தமிழகத்திற்கு நீர் பங்கீடு செய்ய வேண்டும் என்ற கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை செப்டம்பர் 26-ம் தேதி பெங்களூரில் பந்த் அறிவிக்கப்பட்டு, நகரத்தின் அனைத்து பகுதிகளிலும் பெரிய அளவில் இந்த போராட்டம் நடத்த திட்டமிட்டப்பட்டு உள்ளது.

கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னட ஆதரவு அமைப்புகள் மற்றும் விவசாயிகள் சங்கங்கள் இணைந்து செப்டம்பர் 26-ம் தேதி பெங்களூரு பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. இதே நாளில் கர்நாடகா முழுவதும் பந்த் நடத்தவும் திட்டமிட்டு உள்ளது முக்கியமாக விஷயமாக பார்க்கப்படுகிறது. இதனால் செப்டம்பர் 26 ஆம் தேதி அனைத்து பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் மூடப்பட உள்ளது, மேலும் டாக்ஸி சேவைகள, மெட்ரோ சேவைகள், தியேட்டர்கள் மூடப்பட உள்ளது. உணவகங்கள், மருத்துவமனைகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தாலும் அடிப்படை சேவை என்பதால் இயங்க உள்ளது.

Previous Post

தொழிலதிபரையும், மனைவியையும் கட்டிப்போட்டு கொள்ளையடித்த வழக்கில் உறவினர், பெண் டெய்லர் உட்பட 3 பேர் கைது

Next Post

கூடுதல் தகுதி; உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை பதவி இறக்கக்கூடாது!: ராமதாஸ்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கூடுதல் தகுதி; உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை பதவி இறக்கக்கூடாது!: ராமதாஸ்

கூடுதல் தகுதி; உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை பதவி இறக்கக்கூடாது!: ராமதாஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In