Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2 மாணவர்கள் செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி பலி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 28, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
2 மாணவர்கள் செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி பலி
30
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருவள்ளூர், செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க வந்த 2 மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர இருந்த நிலையில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.

சென்னை போருர் அடுத்த அய்யப்பன்தாங்கல், சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த ரிஷிகேஷ், விருகம்பாக்கம பகுதியை சேர்ந்த ஹரிஷ். இவர்கள் இருவரும் மாங்காடைச் சேர்ந்த ரிஸ்வான் (18), சாம் (18) ஆகிய இருவருடன் நேற்று மாலை, செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றிப்பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில், இருசக்கர வாகனத்தை நிறுத்தி, ஏரியை சுற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது ஹரிஷ் மற்றும் ரிஷிகேஷ் ஏரியின் 4ஆவது மதகின் கீழே இறங்கி கால்களை நீரில் நனைத்து விளையாடிய போது திடீரென நிலை தடுமாறி இருவரும் ஏரியில் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளனர்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் இருவர் அவர்களை மீட்க முயன்றும் முடியாமல் போனது. தகலவறிந்து அங்கு வந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் போராடி இருவர் உடல்களையும் மீட்டனர்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ரிஷிகேஷ் ஊட்டி அரசு மருத்துவ கல்லூரியிலும், ஹரிஷ் தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கும் காத்திருந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. நண்பர்களுடன் சேர்ந்து ஏரியை சுற்றி பார்க்க வந்தபோது இருவரும் உயிரிழந்த சம்பவம், உறவினர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீப காலமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பள்ளி மாணவர்கள், மாணிவிகள், சிறுவர்கள், சிறுமிகள், கல்லூரி மாணவர்கள் ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில் சிக்கி உயிரிழக்கும் நிகழ்வுகள் தொடர்கதையாகி வருகிறது. இதற்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

.

Tags: chennaiஏரயலசகமசமபரமபககமதரசசதரவலநடபரமபலபறறமணவரகளமழக
Previous Post

தமிழ் சினிமாவே வேணாமடா சாமி!. கன்னட சினிமா பக்கம் ஒதுங்கிய ஜெயம் ரவி!..

Next Post

கட்டபஞ்சாயத்து பேசிக் கொண்டிருந்தபோதே… 3 பேரை சரமாரியாக வெட்டிய பாஜக பிரமுகர்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அதிர்ச்சி... 3 பேரை சரமாரியாக வெட்டிய பாஜக பிரமுகர்! பஞ்சாயத்து பேசியபோது கொலைவெறி தாக்குதல்

கட்டபஞ்சாயத்து பேசிக் கொண்டிருந்தபோதே... 3 பேரை சரமாரியாக வெட்டிய பாஜக பிரமுகர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In