ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியினரின் நடத்திய பாதயாத்திரையில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் புகுந்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முக்கிய எதிர்க்கட்சியாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் அடிக்கடி மோதல், தகராறு, வன்முறைகள் நடந்து வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் நாரா லோகேஷ் மாநிலம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

இதனிடையே, ஏலூர் மாவட்டம் முஜிமேடு பகுதியில் பாதயாத்திரை சென்ற போது ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் உள்ளே புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களை வீசி பயங்கரமாக தாக்கிக்கொண்டனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது. அண்மைக்காலமாக தெலுங்கு தேசம் கட்சியினருக்கும், ஆளுங்கட்சியினருக்கும் இடையே மோதல்கள் நிலவி வருகிறது நினைவில் கொள்ளத்தக்கது.

