ரகுவரன் ரோகிணி பிரிவுக்கான காரணத்தை ரகுவரன் சகோதரர் ரமேஷ் பகிர்ந்து இருக்கிறார்
ரகுவரன் சகோதரர் ரமேஷ் பேசும் போது “ரகுவரன் அவரது மனைவியை ரோ என்று அழைப்பார். நான் அவரை ரோகிணி என்று அழைப்பேன். ரோகிணி, மகன் விட்டு பிரிந்ததால் தான் ரகுவரனை இறந்துவிட்டார் என்று ரோகிணி சில பேட்டிகளில் சொல்லி இருந்ததாக தகவல்கள் வருகின்றன. அதில் பெரிதாக உண்மை இல்லை. கணவன், மனைவிக்குள் ஆயிரம் இருக்கலாம். அதைப் பற்றி நமக்கு தெரியாது.
ஆனால் அவர்கள் இருவருக்குள் நல்ல ஒரு புரிதல் இருந்தது. ரோகிணியையும் நாங்கள் குற்றம் சொல்ல முடியாது. அதே நேரம் ரகுவரனையும் குற்றம் சொல்ல முடியாது. அவர்களுக்குள் விவகாரத்து என்பது நடந்து விட்டது அவ்வளவுதான்.
இருப்பினும் ரகு ரோகிணியை காதலித்துக் கொண்டுதான் இருந்தார். அதேபோல ரோகிணியும் ரகுவரனை காதலித்துக் கொண்டுதான் இருந்தார். சில பேர் ரோகிணியைப் பற்றி சமூக வலைதளங்களில் தவறாக பேசுகிறார்கள். அதில் உண்மை இல்லை.
முன்னதாக நான் கொடுத்த நேர்காணலில் என்னைப்பார்த்த சில நல்லவர்கள் எனக்கு அழைத்து ஏதாவது உதவி செய்ய வேண்டுமா என்று கேட்டார்கள். நல்லதுதான். ஆனால் நான் யாரும் எனக்கு சோறு போட வேண்டாம். என்னிடம் இருப்பதைக் கொண்டு நான் சந்தோஷமாக இருக்கிறேன்
நான் நிறைய தவறு செய்திருக்கிறேன். ஆனால் அந்த தவறை என்னால் கொள்ள முடியும். அதனால் என்னால் முன்னேறிச் செல்ல முடிகிறது. நீ யார் எனக்கு சொல்லிக்கொடுப்பதற்கு என்ற ஈகோ எல்லாம் எனக்கு கிடையாது.” என்று பேசினார்.

