Friday, September 18, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இந்தியா முன்வைக்கும் ஈழத் தமிழருக்கான 13-வது திருத்தம்-அனைத்து கட்சிகளுடன் விவாதிக்க வேண்டும்: ரணில்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 27, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இந்தியா முன்வைக்கும் ஈழத் தமிழருக்கான 13-வது திருத்தம்-அனைத்து கட்சிகளுடன் விவாதிக்க வேண்டும்: ரணில்
4
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கொழும்பு: இந்தியா வலியுறுத்தி வருகிற ஈழத் தமிழருக்கான 13-வது அரசியல் சாசன திருத்தத்தை நடைமுறைப்படுத்த அனைத்து அரசியல் கட்சிக்ளுடன் விவாதம் நடத்தப்பட வேண்டும் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே அண்மையில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இதனையடுத்து கொழும்பில் நேற்று அதிகாரப் பகிர்வு தொடர்பான அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் ஜேவிபி தவிர பெரும்பாலான கட்சிகள் பங்கேற்றன.

இலங்கை அனைத்து கட்சிக் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கே பேசியதாவது; போலீஸ் அதிகாரம் தவிர எஞ்சிய அனைத்து அதிகாரங்களையும் மாகாண சபைகளுக்கு கொடுக்க முடியும். இது தொடர்பாக அமைச்சரவையில் என்னுடைய தீர்வு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

13-வது அரசியல் சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்த தமிழ் அரசியல் கட்சிகளுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்துவது போதுமானது அல்ல. அனைத்து தரப்பு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி விவாதிக்க வேண்டியதும் அவசியமாகும். இலங்கையின் மாகாண சபைகள் முழுமையாக செயல்பட முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

இலங்கையின் 9 மாகாண சபைகளில் 7-; சிங்கள மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். 2-ல் தமிழர் பெரும்பான்மையினர். மாகாண சபை முறை தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால் தற்போதைய குறைபாடுகள் அனைத்தும் சரி செய்யப்பட வேண்டும். 13-வது திருத்தம் என்பது தமிழர் பெரும்பான்மையினராக வசிக்கும் மாகாண சபைகள் தொடர்பானது மட்டும் அல்ல. ஒட்டுமொத்த இலங்கைக்கும் பொருந்தக் கூடியது. ஆகையால்தான் இலங்கையின் அனைத்து தரப்பினருடன் விவாதிக்கப்பட வேண்டும். இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே கூறினார்.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

ஜி-20 மாநாட்டு சுற்றுச்சூழல் பணிக்குழு கூட்டம்: மத்திய அரசு செயலர் தொடங்கிவைத்தார்

Next Post

விருதுநகரில் மருதுசேனை மாநில நிர்வாகி கொலை; 15 பேர் மீது வழக்கு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விருதுநகரில் மருதுசேனை மாநில நிர்வாகி கொலை; 15 பேர் மீது வழக்கு

விருதுநகரில் மருதுசேனை மாநில நிர்வாகி கொலை; 15 பேர் மீது வழக்கு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In